MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2026-க்கு பிறகு குட்பை சொல்லும் 5 ஸ்டார் வீரர்கள்! அட! மிஸ்டரி ஸ்பின்னரும் இருக்காரா?

IPL 2026-க்கு பிறகு குட்பை சொல்லும் 5 ஸ்டார் வீரர்கள்! அட! மிஸ்டரி ஸ்பின்னரும் இருக்காரா?

IPL 2026: ஐபிஎல் 2026 சீசன் முடிந்த பிறகு தோனி உள்பட பல ஸ்டார் வீரர்கள் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது. யார் யார் ஓய்வுபெறப் போகிறார்கள்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : May 19 2026, 07:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஐபிஎல் 2026 கிளைமேக்ஸ்
Image Credit : X/@CricCrazyJohns

ஐபிஎல் 2026 கிளைமேக்ஸ்

ஐபிஎல் 2026 தொடர் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது. ஆர்சிபி ஏற்கெனவே ப்ளேஆஃப் இடத்தை உறுதி செய்துவிட்டது. அதேபோல, ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகளும் டாப் 4-க்குள் நுழைந்துவிட்டன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு 5 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

ஐபிஎல் 2026-ல் விளையாடும் சில ஸ்டார் வீரர்களுக்கு வயது மற்றும் ஃபிட்னஸ் காரணமாக அடுத்த ஆண்டு விளையாடுவது சந்தேகம்தான். இந்தப் பட்டியலில் முதல் பெயரைக் கேட்டால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயம் உடையும். ஆம், அவர் வேறு யாருமல்ல, சென்னை சூப்பர் கிங்ஸின் 'தல' மகேந்திர சிங் தோனிதான். தோனியுடன் மேலும் நான்கு ஸ்டார் வீரர்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர். இது குறித்து பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மகேந்திர சிங் தோனி
Image Credit : Getty

மகேந்திர சிங் தோனி

கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்துடிப்பான எம்.எஸ். தோனிதான் இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். 'தல' தலைமையில் சிஎஸ்கே 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இந்த சீசனில் தோனி சிஎஸ்கே அணியில் இருந்தாலும், முழங்கால் காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. 44 வயதான தோனி, இந்த சீசனுக்குப் பிறகு ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

Related Articles

Related image1
IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!
Related image2
IPL 2026: CSK vs SRH: இம்பேக்ட் பிளேயராக தோனி? மேட்ச் வின்னர் கம்பேக்! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
35
சுனில் நரைன்
Image Credit : ANI

சுனில் நரைன்

இந்தப் பட்டியலில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் பெயர் வெஸ்ட் இண்டீஸின் லெஜண்டரி டி20 ஸ்பின்னர் சுனில் நரைன். இந்த சீசனில்தான் நரைன் ஐபிஎல்-லில் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். அதுமட்டுமின்றி, ஐபிஎல்-லில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 37 வயதிலும் நரைன் தனது ஸ்பின் மேஜிக்கால் மிரட்டி வருகிறார். ஆனால், இந்த சீசனின் வெற்றியுடன் ஐபிஎல்-க்கு குட்பை சொல்ல நரேன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

45
இஷாந்த் சர்மா
Image Credit : stockPhoto

இஷாந்த் சர்மா

இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 311 விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவ வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இஷாந்த் சர்மா இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருக்கிறார். ஆனால், அவருக்கு இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. குஜராத் அணி நிர்வாகம் இப்போது இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. எனவே, 37 வயதான இந்த நட்சத்திர பந்துவீச்சாளரின் ஐபிஎல் கரியருக்கு ஃபுல் ஸ்டாப் விழுந்துவிட்டதாகவே கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

55
டிரென்ட் போல்ட்
Image Credit : ANI

டிரென்ட் போல்ட்

ஒரு காலத்தில், டிரென்ட் போல்ட்டின் வேகம் மற்றும் ஸ்விங்கைப் பார்த்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் கூட பயந்தார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக போல்ட்டால் முன்பு போல் விக்கெட் எடுக்க முடியவில்லை. இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போல்ட்டின் ஆட்டம் மிகவும் ஏமாற்றம் அளித்தது. அதனால், அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதைப் பார்க்கும்போது, 2026-க்குப் பிறகு டிரென்ட் போல்ட்டின் ஐபிஎல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்றே தெரிகிறது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
சிஎஸ்கே
எம். எஸ். தோனி

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs IRE 1st T20: முதல் டி20-யில் இந்தியாவை அலற விட்ட அயர்லாந்து.. மாஸ் வெற்றி.. சரித்திர சாதனை!
Recommended image2
மகளிர் டி20 உலகக்கோப்பை ஷஃபாலி வர்மா அதிரடி! வங்கதேசத்தை பந்தாடி இந்தியா மாஸ் வெற்றி!
Recommended image3
India Vs Ireland 1st T20: வைபவ் சூர்யவன்ஷிக்காக அதிரடி மன்னன் நீக்கம்! இந்திய அணி பிளேயிங் லெவன்!
Related Stories
Recommended image1
IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!
Recommended image2
IPL 2026: CSK vs SRH: இம்பேக்ட் பிளேயராக தோனி? மேட்ச் வின்னர் கம்பேக்! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved