MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Vaibhav Sooryavanshi: 15 வயதில் ருத்ரதாண்டவம்! கெயில் சாதனையை காலி செய்யபோகும் சூர்யவன்ஷி! ப்ளே-ஆஃப் சுற்றில் RR!

Vaibhav Sooryavanshi: 15 வயதில் ருத்ரதாண்டவம்! கெயில் சாதனையை காலி செய்யபோகும் சூர்யவன்ஷி! ப்ளே-ஆஃப் சுற்றில் RR!

RR vs LSG: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்ணயித்த 222 ரன்கள் என்ற இமாலய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிகரமாக சேஸ் செய்தது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் 93 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் பல சாதனைகளைப் படைத்துள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : May 20 2026, 10:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ராஜஸ்தான் ராயல்ஸ் Vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
Image Credit : Asianet News

ராஜஸ்தான் ராயல்ஸ் Vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஜெய்ஸ்வால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டம் ஆடினர். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய மிட்செல் மார்ஷ் மற்றும் இங்லிஸ் இருவரும் சேர்ந்து ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை அலறவிட்டனர். ஜோஷ் இங்லிஸ் 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்கள் ரன்-அவுட்டாகி வெளியேறினார். இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
ராஜஸ்தான் அணிக்கு கடின இலக்கு நிர்ணயம்
Image Credit : ANI

ராஜஸ்தான் அணிக்கு கடின இலக்கு நிர்ணயம்

221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் அணியின் கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - வைபவ் சூர்யவன்ஷி இருவரும் களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெய்ஸ்வால் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் மற்றொரு புறம் வைபவ் சூர்யவன்ஷி ருத்தரதாண்டவம் ஆடினார். தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் 7 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களுடன் 93 ரன்கள் குவித்து, நூலிழையில் சதத்தை தவறவிட்டார். துருவ் ஜூரல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை ராஜஸ்தான் அணி பிரகாசப்படுத்தியுள்ளது.

Related Articles

Related image1
Sanju Samson: மின்னல் வேக ஸ்டம்பிங்.. களத்தில் வெடித்த வாக்குவாதம்..! பிளே-ஆஃப்க்குள் நுழைந்த SRH
Related image2
Ishan Kishan: "வீட்டுக்கு போய் விசில் அடிங்க"... சேப்பாக்கத்தில் CSK ரசிகர்களை வம்பிழுத்த இஷான் கிஷன்! வீடியோ வைரல்
35
53 சிக்ஸர்கள் அடித்த வைபவ்
Image Credit : ANI

53 சிக்ஸர்கள் அடித்த வைபவ்

இந்த சீசனில் இதுவரை 53 சிக்ஸர்கள் அடித்துள்ள வைபவ், ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் (59) அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை நெருங்கி வருகிறார். ஆண்ட்ரே ரஸிலின் (52 சிக்ஸர்கள்) சாதனையை அவர் ஏற்கனவே முறியடித்துவிட்டார்.

45
 ஒரே சீசனின் வைபவ் 426 ரன்கள் குவிப்பு
Image Credit : ANI

ஒரே சீசனின் வைபவ் 426 ரன்கள் குவிப்பு

இந்த சீசனின் பவர் பிளேயில் மட்டும் வைபவ் 426 ரன்கள் குவித்துள்ளார். இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனின் பவர்பிளேயில் இரண்டாவது அதிகபட்சமாகும். டேவிட் வார்னர் 467 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

55
ராஜஸ்தான் முதலிடம்
Image Credit : Asianet News

ராஜஸ்தான் முதலிடம்

வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனின் பவர்பிளேயில் 60 சிக்ஸர்களை அடித்துள்ளது. இதன் மூலம், பவர்பிளேயில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற புதிய ஐபிஎல் சாதனையை ராஜஸ்தான் படைத்துள்ளது. அதுமட்டுமல்ல 220 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்த அணிகளின் பட்டியலில் ராஜஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வைபவ் சூர்யவன்ஷி
ராஜஸ்தான் ராயல்ஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026-க்கு பிறகு குட்பை சொல்லும் 5 ஸ்டார் வீரர்கள்! அட! மிஸ்டரி ஸ்பின்னரும் இருக்காரா?
Recommended image2
Now Playing
வீட்டுக்கு போய் விசில் அடிங்க"... சேப்பாக்கத்தில் CSK ரசிகர்களை வம்பிழுத்த இஷான் கிஷன்! வீடியோ வைரல்
Recommended image3
Now Playing
CSK Playoffs 2026 | SRH-யிடம் தோல்வி... CSK-க்கு ப்ளேஆஃப் வாய்ப்பு இருக்கா? கணக்குகள் சொல்வதென்ன?
Related Stories
Recommended image1
Sanju Samson: மின்னல் வேக ஸ்டம்பிங்.. களத்தில் வெடித்த வாக்குவாதம்..! பிளே-ஆஃப்க்குள் நுழைந்த SRH
Recommended image2
Ishan Kishan: "வீட்டுக்கு போய் விசில் அடிங்க"... சேப்பாக்கத்தில் CSK ரசிகர்களை வம்பிழுத்த இஷான் கிஷன்! வீடியோ வைரல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved