ஐபிஎல் தொடர், கடந்த 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் உற்சாகமாக ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காண்கின்றன. தோனி தலைமையிலான சென்னை அணி மீண்டும் களமிறங்குவதால், சென்னை அணியின் ரசிகர்களும் தோனியின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான முன்னாள் சாம்பியன் சென்னை அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ரோஹித் தலைமையிலான மும்பை அணியின் ஜெர்சி மாற்றப்பட்டுள்ளது. இதுவரை அணிந்து வந்த ஜெர்சியை விட்டு, இந்த ஐபிஎல்லில் புதிய ஜெர்சியுடன் மும்பை அணி களமிறங்குகிறது.

புதிய ஜெர்சி தொடர்பான வீடியோ பதிவை அந்த அணி, டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

3-time champions will wear the Blue & Gold with pride!

Paltan, presenting to you our armour for the season. #CricketMeriJaan pic.twitter.com/1PwdMeBV38
— Mumbai Indians (@mipaltan) March 24, 2018