mumbai indians :2022ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் சோகமாக அமைந்துள்ளது 7 போட்டிகளிலும் தோல்வி அடைந்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் நிலையி்ல் இருக்கிறது.
2022ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் சோகமாக அமைந்துள்ளது 7 போட்டிகளிலும் தோல்வி அடைந்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் நிலையி்ல் இருக்கிறது.
ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 7 ஆட்டங்களில் தோல்விஅடைந்தது கிடையாது. ஆனால் இந்த முறை ஒவ்வொரு போட்டியிலும் மறக்க முடியாத தோல்வியைச் சந்தித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 7 ஆட்டங்களி்ல் தோல்விஅடைந்த அணியும் மும்பை இந்தியன்ஸ் அணிதான்.

தொடர்ந்து 7 தோல்விகள் மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை கருக்கியிருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டில் இதுபோன்று மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்த 5 ஆட்டங்களில் தோல்வி அடைந்து அதன்பின் ப்ளே ஆப் சுற்றுக்கு சென்றதே என்று கேட்கலாம். ஆனால், இந்த தொடரில் கடைபிடிக்கப்பட்ட முறை வேறு இதுவேறு. இந்த சீசனில் ரவுண்ட் ராபின் முறை கடைபிடிக்கப்படுகிறது.
ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 14 புள்ளிகள் எடுத்திருக்க வேண்டும். 16 புள்ளிகள் எடுத்திருந்தால், நிகர ரன்ரேட் நன்கு இருந்தால் உறுதியாகிவிடும். ஒருவேளை 14 புள்ளிகளுடன் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள் இருந்தால், ரன்ரேட் அடிப்படையில் தேர்வாகும்.
அந்தவகையில் ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். மும்பை இந்தியன்ஸ் இதுவரை 7 ஆட்டங்களில் அதாவது பாதி ஆட்டங்களில் விளையாடி தோல்வி அடைந்துவிட்டது.

அடுத்ததாக 7 ஆட்டங்களில் விளையாட வேண்டும், கண்டிப்பாகஅனைத்து ஆட்டங்களிலும் வெல்ல வேண்டும். அவ்வாறு வென்றால்தான் 14 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் மற்ற அணிகளுக்கு நெருக்கடி கொடுக்க இயலும். ஆதலால், அடுத்துவரும் ஒவ்வொரு போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அதிகமான ரன்ரேட்டில் வெல்ல வேண்டும்.
எதிரணியை குறைந்த ஓவரில் சுருட்டி அதை குறைந்த ஓவரில் சேஸிங் செய்ய வேண்டும. அல்லது எதிரணி அடித்த ஸ்கோரை விக்கெட்டுகளை குறைவாக இழந்து, குறைந்த ஓவரில் சேஸ் செய்தால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன்ரேட் உயரும்.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒருவேளை 14 புள்ளிகள் எடுத்தாலும் ப்ளேஆஃப் செல்லுமா என்றாலும் அது சந்தேகம்தான். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி மைனஸ்0-892 ரன்ரேட்டில் இருக்கிறது. மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி நிகர ரன்ரேட் அடிப்படையில்தான் மும்பை இந்தியன்ஸ் வாய்ப்பு உறுதியாகும்.

அடுத்து 30ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸுடனும், மே 6ம் தேதி குஜராத் டைட்டன்சுடனும் மும்பை அணி மோதுகிறது. மே 9ம் தேதி கொல்கத்தாவுடனும், 12ம் தேதி சிஎஸ்கே அணியுடனும், 17ம் தேதி சன்ரைசர்ஸ் அணியுடனும், 21ம்தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடனும் மும்பை மோதுகிறது. அடுத்துவரும் 7 ஆட்டங்களுமே மும்பை அணிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவமானதோ அதேபோன்ற மற்ற அணிகளுக்கும் முக்கியம் என்பதால், கடும் சவால் அளி்க்கக்கூடும். இப்போதுள்ள நிலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்வது கடினம், ப்ளேஆஃப் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தாலும் வியப்பில்லை.
