Asianet News TamilAsianet News Tamil

MTB ஹிமாச்சல் ஜான்ஜெஹ்லி 2022 : முதலாவது தனித்துவமான மலை பைக்கிங் பந்தயம் ! விவரங்கள் இங்கே!

MTB ஹிமாச்சல் ஜான்ஜெஹ்லி 2022ன் முதலாவது மலை பைக்கிங் பந்தயம் நாளை மறுநாள் (ஜூன் 23) அன்று தொடங்கப்பட்டு ஜூன் 26 அன்று முடிவடைகிறது. நீங்களும் மலை பைக்கிங் போட்டியில் கலந்துகொள்ள விருப்பமா... இப்போதே இங்கேயே பதிவுசெய்துகொள்ளுங்கள்
 

MTB Himachal Janjehli 2022 1st Edition: Experience this unique mountain biking race; details here
Author
First Published Jun 21, 2022, 8:45 AM IST

MTB ஹிமாச்சல் ஜான்ஜெஹ்லி 2022 மலை பைக்கிங் பந்தயத்தின் முதலாவது போட்டி, ஜூன் 23 அன்று கொடி அசைத்து தொடங்கப்பட இருக்கிறது. இந்த நான்கு நாள் பந்தயத்தை ஹிமாலயன் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் மற்றும் டூரிஸம் புரமோஷன் அசோசியேஷன் (HASTPA) ஏற்பாடு செய்துள்ளது.

போட்டிக்கு இப்போதே பதிவு செய்யுங்கள்.

இந்த பந்தயம் வரலாற்றுச் சிறப்புமிக்க ரிட்ஜ் மற்றும் சிம்லாவின் முக்கிய நகரத்தைச் சுற்றி நடைபெறும், இது மாநிலத்தின் செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்து காண்பிக்கும். இந்த பந்தயம் ஹிமாச்சலப் பிரதேச மக்களுக்கு ஒரு காட்சிப் பொருளாகவும் அமையும்.

ஜூன் 24ம் தேதி சிம்லாவில் கொடியேற்றத்துடன் தொடங்கி, ஜூன் 26ம் தேதி அழகிய நகரமான ஜான்ஜெலியில் நிறைவடைகிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது, MTB ஹிமாச்சல் ஜான்ஜெஹ்லியின் இந்த முதலாவது ஓட்டம், இந்திய ரைடர்களுக்கு உண்மையான மலை பைக்கிங் அனுபவத்தையும், நாடு முழுவதும் உள்ள சிறந்த ரைடர்களுக்கு எதிராக போட்டியிடுவதற்குமான ஒரு திறனை வளர்த்துக்கொள்ள உதவும் என்றனர்.

இந்த பந்தயம, ஜூன் 23 அன்று சிம்லாவின் ஹிஸ்டாரிக் ரிட்ஜிலிருந்து மாலை 4:30 மணிக்கு தொடங்கி, ஜூன் 26 அன்று ஜான்ஜெஹ்லியில் முடிவடையும். இந்த நான்கு நாட்களில் பைக்கிங் வீரர்கள், சுமார் 175 கிமீ பயணம் செய்கின்றனர்.
காடு, மலை, ஆஃப்-ரோடு, உடைந்த தார், சரளை, பாறைகள், மண், மணல், லூஸ் ராக் ஆகியவற்றை எதிர்கொண்டு வீரர்கள் பயணம் செய்தாக வேண்டும்.

MTB ஹிமாச்சல் ஜான்ஜெஹ்லி 2022 முதலாவது பந்தய விவரங்கள்:

ஜூன் 23, மாலை 4:30 மணிக்கு (ஹெரிடேஜ் ரைட்) சிம்லா நகரத்திலிருந்து தொடங்கி டாக் பங்களா வரையும்,

தொடக்க நிலை 1: ஜூன் 24, காலை 7 மணிக்கு, டாக் பங்களாவில் தொடங்கி சிண்டியின் அழகான ஆப்பிள் பண்ணை வரை பயணம் நடைபெறுகிறது. (இரவு நிறுத்தம்)

நிலை 2: ஜூன் 25, காலை 7 மணிக்கு, சிண்டியில் தொடங்கி ஜான்ஜெஹ்லிக்கு ஆரம்ப பகுதி வரை நடைபெறுகிறது. (இரவு நிறுத்தம்)

நிலை 3: ஜூன் 26, காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு ஜான்ஜெஹ்லியில் முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து, நிறைவு விழா நடைபெற உள்ளது.

பந்தய பயணப் பாதை சிறப்பம்சங்கள்:

தொடங்கும் இடம்: சிம்லா
போட்டி நாட்கள்: 4
சவாரி நாட்கள்: 3
தூரம்: 175 கி.மீ
அதிகபட்ச உயரம்: தோராயமாக 2750 மீட்டர்
குறைந்தபட்ச உயரம்: சுமார் 800 மீட்டர்
வகை: :XC, MTB, ஆஃப்-ரோடு, உடைந்த தார், சரளை, பாறைகள், மண், மணல், லூஸ் ராக்

போட்டிக்கு இப்போதே பதிவு செய்யுங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios