ஐபிஎல் 11வது சீசன் கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இதுவரை நடந்த போட்டிகளின் நிலவரப்படி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஹைதராபாத், இரண்டாமிடத்தில் கொல்கத்தா, மூன்றாமிடத்தில் பஞ்சாப், நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் உள்ளன.

பெங்களூரு ஆறாவது இடத்திலும் டெல்லி ஏழாவது இடத்திலும், இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத மும்பை அணி கடைசி இடத்திலும் உள்ளது.

இதுவரை 13 போட்டிகள் நடந்துள்ளன. இதுவரை நடந்த போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் 5 வீரர்களின் பட்டியல்:

1. ஆண்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) - 19 சிக்ஸர்கள்

2. சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 12 சிக்ஸர்கள்

3. டிவில்லியர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) - 10 சிக்ஸர்கள்

4. கே.எல்.ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) - 8 சிக்ஸர்கள்

5. பிராவோ (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 8 சிக்ஸர்கள்