போன வாரம் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் 10-ஆவது பட்டம் வென்ற நடால் இப்போது பார்சிலோனா ஓபனிலும் 10-ஆவது பட்டம் வென்று வாகைச் சூடியுள்ளார்.

பார்சிலோனா ஓபன் போட்டி ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் நடால் மற்றும் ஆஸ்திரேலியாவின் டொமினிக்குடன் மோதினார்.

இதில், 6-4, 6-1 என்ற நேர் செட்களில் டொமினிக் தீமை வீழ்த்தி நடால் வாகைச் சூடினார்.

இந்த வெற்றி குறித்துப் நடால் பேசியது:

"கடந்த வாரம் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியிலும், இப்போது பார்சிலோனா ஓபனிலும் சாம்பியனாகி இருக்கிறேன். எனக்கு இந்த இரண்டு போட்டிகளுமே சிறப்புமிக்கவை. எனது கிளப் மக்கள் முன்னிலையில் பார்சிலோனா ஓபனில் 10-ஆவது பட்டம் வென்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார்.

பார்சிலோனா ஓபனில் 2005 முதல் 2009 வரையிலும், அதன்பிறகு 2011 முதல் 2013 வரையிலும் சாம்பியன் பட்டம் வென்ற நடால், இப்போது 10-ஆவது பட்டத்தைக் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

போன வாரம் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் 10-ஆவது பட்டமும், இப்போது பார்சிலோனா ஓபனில் 10-ஆவது பட்டமும் வென்றுள்ளார் நடால்.

இவர் அடுத்ததாக பிரெஞ்சு ஓபனில் 10-ஆவது பட்டத்தை கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்.