mitchell marsh ipl:ஐபிஎல் 15-வது சீசன் டி20 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் காயம் காரணமாக இந்த ஆண்டும் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது.

ஐபிஎல் 15-வது சீசன் டி20 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் காயம் காரணமாக இந்த ஆண்டும் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது.

டெல்லி அணி ஏலத்தில் டேவிட் வார்னர், மிட்ஷெல் மார்ஷ், முஸ்தபிசுர் ரஹ்மான், ரோமன் பாவெல் ஆகியோரை விலைக்கு வாங்கியது. இதில் 4பேருமே கடந்த போட்டியில் விளையாடவில்லை. இதில் ஆஸி. ஆல்ரவுண்டர் மார்ஷுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியின்போது இடுப்புப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயம் 

இந்த காயத்தைஆய்வு செய்தபோது தீவிரமாக இருப்பதால் மார்ஷால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல்தொடரிலிருந்தும் முழுமையாக விளையாடமாட்டார்என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில்இடம் பெற்று ஒரு போட்டியில் விளையாடிவிட்டு, காயம் காரணாக மார்ஷ் வெளியேறினார். கடந்த 2021ம் ஆண்டு சீசனில் மார்ஷ் ஐபிஎல் தொடரிலேயே விளையாடவில்லை. இந்த முறையும் மார்ஷ் விளையாட முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி வேறு வெளிநாட்டு வீரரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 5 மாற்று வீரர்கள்

அந்த வகையில் 5 வெளிநாட்டு வீரர்கள் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தேர்வில் உள்ளனர். அதில் முதலாவது ஆஸ்திரேலிய வீரர் பென் மெக்டார்மார்ட். பிக்பாஷ் லீக்கில் கடந்த இரு சீசன்களிலும் 450 ரன்களுக்கும் மேல் ரன்கள் குவித்து மிரளவைத்தார்.

இலங்கை ஆல்ரவுண்டர்
2-வதாக இலங்கை ஆல்ரவுண்டர் தசுன் சனகா. மிட்ஷெல் மார்ஷ் ஆல்ரவுண்டர் என்பதால் ஆல்ரவுண்டர் இடத்தை நிரப்பும் பொருட்டு சனகாவை தேர்வு செய்யவும் வாய்புண்டு.

ஆஸி.அ னுபவ வீரர்
3-வதாக ஆஸ்திரேலிய வீரர் பென் கட்டிங். ஆஸ்திரேலிய அணிக்காக குறைவான போட்டிகளே கட்டிங் விளையாடியிருந்தாலும், உள்நாட்டுப் போட்டிகளில் அதிகளவில் விளையாடியுள்ளார். 2016ம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல இறுதிப்போட்டியில் கட்டிங்கின் ஆட்டம் முக்கியக் காரணமாக இருந்தது. அனுபவமான ஆட்டக்காரர் கட்டிங் என்பதால் டெல்லி அணி பரிசீலிக்கலாம்.

பந்துவீச்சாளர்கள்
4வதாக, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர், டாப்ஆர்டர் பேட்ஸ்மேன் மோய்சஸ் ஹென்ரிக்ஸ். கடந்த 3 பிக்பாஷ் லீக்கிலும் தனது அணியை இறுதிப்போட்டிவரை அழைத்துச் சென்று 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுகொடுத்துள்ளார். கடந்த சீசனில் ஹென்ரிக்ஸ் 440 ரன்கள் குவித்தார்.
நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் காலின் டி கிராண்ட்ஹோம். நல்ல வேகப்பந்துவீச்சாளர், எப்போதாவது பேட்டிங் செய்யக்கூடியவர். இந்த 5 வீரர்களில் ஒருவரை டெல்லி கேபிடல்ஸ் அணி மார்ஷுக்கு பதிலாக தேர்வு செய்யவாய்ப்புண்டு