Asianet News TamilAsianet News Tamil

உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல்: மணிக்கட்டு வலியுடன் 200 கிலோ எடையை தூக்கி வெள்ளி வென்றார் மீராபாய் சானு

உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதலில் மணிக்கட்டு வலியுடன் 200 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு.
 

mirabai chanu clinches silver medal in world championship weightlifting despite wrist issue
Author
First Published Dec 7, 2022, 3:25 PM IST

உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டிகள் கொலம்பியாவில் நடந்துவருகிறது. இதில் இந்தியாவின் மீராபாய் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் இந்தியாவிற்கு வெள்ளி வென்று கொடுத்தவர் மீராபாய் சானு. உலக சாம்பியன்ஷிப் 49 கிலோ எடைப்பிரிவில் மணிக்கட்டு வலியுடன் ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ எடையையும், க்ளீன்&ஜெர்க் பிரிவில் 113 கிலோ எடையையும் தூக்கி வெள்ளி வென்றுள்ளார்.

நான்கரை வருஷத்துக்கு பின் மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகிறார் ஸ்டீவ் ஸ்மித்

டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவா 198 (89+109) கிலோ எடையை தூக்கி வெண்கலம் வென்றார். சீன வீராங்கனை ஜியாங் 206 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார்.

BAN vs IND: காயத்தால் களத்திலிருந்து வெளியேறி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ரோஹித் சர்மா

டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை விட அதிக எடையை தூக்கி அவரை பின்னுக்குத்தள்ளி வெள்ளி வென்று அசத்தினார் மீராபாய் சானு. மீராபாய் சானுவுக்கு மணிக்கட்டு பிரச்னை இருந்தநிலையில், அந்த வலியையும் தாங்கிக்கொண்டு 200 கிலோ எடையை தூக்கி, உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதலில் 2வது முறையாக பதக்கம் வென்றுள்ளார் மீராபாய் சானு.

ICC WTC புள்ளி பட்டியல்: பாகிஸ்தான் தோல்வியால் இந்தியாவிற்கு ஃபைனல் வாய்ப்பு..!

Follow Us:
Download App:
  • android
  • ios