மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் சென்னை வேலம்மாள் பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றனர்.

பாரதியார் குழு விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் அண்மையில் நடைபெற்றன.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, மாநில அளவிலான இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதில் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளி மாணவர்கள் அணி தங்கப் பதக்கம் வென்றது.

வெற்றி பெற்ற இந்த அணியின் வீரர்களை பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாரட்டினர்.