mi vs dc: ishan kishan ipl 2022: மும்பை இந்தியன்ஸ் அணியின்அதிரடி தொடக்க வீரர் இஷன் கிஷன் காலில் பந்து பட்டதையடுத்து, அடுத்துவரும் போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின்அதிரடி தொடக்க வீரர் இஷன் கிஷன் காலில் பந்து பட்டதையடுத்து, அடுத்துவரும் போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

இஷன் கிஷன் காட்டடி

இஷான் கிஷனின் காட்டடி ஆட்டம், ரோஹித் சர்மாவின் அருமையான தொடக்கம் ஆகியவற்றால் மும்பையில் இன்று நடந்து வரும் ஐபிஎல் டி20 போட்டியின் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பையில் உள்ள பராபோர்ன் மைதானத்தில் ஐபிஎல் 15-வது சீசனில் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து மும்பை அணி மோதியது. இதில்முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. 

அதிரடி ஆட்டம்

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் ருத்தரதாண்டவம் ஆடிவிட்டார். ரோஹித் சர்மா அதிரடி வேடிக்கை முடிந்தபின், இஷான் கிஷன் தனதுவேட்டையைத் தொடங்கினார். 34 பந்துகளில் அரைசதம் அடித்த இஷான் கிஷன், அடுத்த 14 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். 

15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தி்ருந்தது. இஷன் கிஷன் அதிரடியால் கடைசி 5 ஓவர்களில் 59 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன்48 பந்துகளில் 81 ரன்கள்(2சிக்ஸர்,11பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

காலில் காயம்

இந்நிலையில் பேட்டிங்கின் போது இஷான் கிஷன் காலில் விரலில் பந்துபட்டது. இதில் ஆட்டம் முடிந்தபின் பெவிலியன் திரும்பிய இஷான் கிஷனுக்கு வலி அதிகமாக இருந்தது. இதையடுத்து, இஷான் கிஷனுக்கு கால் விரலில் ஏற்பட்ட காயத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்ய அவரை மருத்துவமனைக்கு ஸ்கேனிங் பரிசோதனைக்கு மும்பை இந்தியன்ஸ் மருத்துவக்குழுவினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவப்பரிசோதனை

இதனால் மும்பை அணியின் விக்கெட் கீப்பராக ஆர்யன் ஜூயல் களமிறக்கப்பட்டு விளையாடி வருகிறார். இந்தத் தகவலை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மருத்துவப்பரிசோதனை முடிந்தபின்புதான் ரிஷப் பந்தின் காயம் குறித்தும், அவர் எப்போது அடுத்துவிளையாடுவார் எனக்கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அடுத்த போட்டியில் இஷன் கிஷன் விளையாடுவாரா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்