Asianet News TamilAsianet News Tamil

mi vs csk:dhoni ‘தல’ தோனியிடம் தலைவணங்கிய ஜடேஜா: ராயுடுவின் கும்பிடு; சிஎஸ்கேயின் வெற்றிக்குப்பின் ஸ்வாரஸ்யம்

mi vs csk ms dhoni :  மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி பெற்ற நிலையில், அந்த வெற்றிக்கு உரித்தான தோனியிடம் தலைவணங்கி கேப்டன் ஜடேஜா நன்றி கூறினார்.

mi vs csk ms dhoni :  Skipper Ravindra Jadeja bows down to MS Dhoni after incredible win
Author
Mumbai, First Published Apr 22, 2022, 11:45 AM IST

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி பெற்ற நிலையில், அந்த வெற்றிக்கு உரித்தான தோனியிடம் தலைவணங்கி கேப்டன் ஜடேஜா நன்றி கூறினார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. 
156 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

mi vs csk ms dhoni :  Skipper Ravindra Jadeja bows down to MS Dhoni after incredible win

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே சேஸிங் செய்தபோது கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 48 ரன்கள் தேவைப்பட்டது. தோனி, பிரிட்டோரிஸ் களத்தில் இருந்தனர். பும்ரா வீசிய 17-வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. உனத்கத் வீசிய 18-வது ஓவரில் தோனி ஒருசிக்ஸர், பிரிட்டோரிஸ் ஒரு பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தனர். கடைசி 2 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா வீசிய 19-வது ஓவரில் இரு பவுண்டரி உள்ளிட்ட 11 ரன்களை பிரிட்டோரிஸ் எடுத்தார். கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.

உனத்கட் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் பிரிட்டோரியஸ்(22) கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அடுத்துவந்த பிராவோ ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தோனியிடம் வழங்கினார். 3-வது பந்தில் தோனி லாங் ஆஃபில் ஒரு சிக்ஸரும், 4-வது பந்தில் ஃபைன் லெக்கில் ஒரு பவுண்டரியும் விளாசினார்.

 5-வது பந்தில் 2 ரன்களும், கடைசிப்பந்தில் பவுண்டரி அடித்து தோனி அவருக்கே உரிய பாணியில் ஃபினிஷ் செய்தார்.தோனி 13 பந்துகளில் 28 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

இந்தப் போட்டியின் வெற்றிக்குப்பின் வீரர்கள் கைகுலுக்கி நன்றி செலுத்தினர். தோனிக்கு ஒவ்வொரு வீரராக கைகுலுக்கி நன்றி செலுத்தியநிலையில் கேப்டன் ஜடேஜா தோனி அருகே வந்ததும் தலைவணங்கி நன்றி செலுத்தினார். ஜடேஜாவுக்கு பின்னால் வந்த அம்பதி ராயுடு, இரு கரம் கூப்பி நன்றி செலுத்தினார்.

வெற்றிக்குப்பின் ஜடேஜா அளித்த பேட்டியில் கூறுகையில் “ மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நெருக்கடியானஇந்த ஆட்டத்தில் வெல்வோம் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். ஏனென்றால், ஆட்டத்தின் கிரேட் ஃபினிஷர் களத்தில் இருந்தார் என்பதால் நம்பினோம். ஆட்டம் நகர்ந்தவிதத்தைப் பார்த்து அனைவரும் பதற்றத்துடன் இருந்தோம்.

mi vs csk ms dhoni :  Skipper Ravindra Jadeja bows down to MS Dhoni after incredible win

ஆனால் ஒரு கட்டத்தில் கிரேட் ஃபினிஷர் களத்தில் இருக்கிறார், ஆட்டத்தின் கடைசிப் பந்தை சந்தித்தால் நிச்சயம் ஆட்டத்தை வெற்றியுடன் முடிப்பார் என தெரிந்துவிட்டது. இன்னும் சிறந்த ஃபினிஷர்தான், ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க முடியும் என்பதை தோனி உலகிற்கு நிரூபித்துவிட்டார்.

எங்கள் அணிக்கு ஏராளமான அனுபவங்கள் இருப்பதால், எப்போது சிறப்பாக ஆட வேண்டும், எந்தநேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். ஒருவேளை நாங்கள் போட்டியில் வெல்லாமல் இருந்திருந்தால்கூட, அமைதியாகவும், ரிலாக்ஸாகவும்தான் இருந்திருப்போம்” எனத் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios