ஸ்பெயினில் நடந்து வரும் “லா லிகா” கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் டெபோர்டிவோ லா கோர்னா அணியை 4-0 என்ற கோல்கணக்கில் புரட்டி எடுத்தது பார்சிலோனா அணி. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு கடந்த 2 மாதத்துக்கும் மேலாக விளையாடாமல் இருந்த லயோனல் மெஸ்ஸி, இந்த ஆட்டத்தில் களமிறங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 

வலிமையான பார்சிலோனா அணியின் முன் டெபோர்டிவோ ஹா கோர்னா அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பார்சிலோனா அணி வீரர்களின் ஆதிக்கமே இருந்தது. இந்த அணி வீரர்கள் பந்தை கடத்தி தங்களுக்குள் வைத்துக்கொண்டு எதிரணியினருக்கு போக்குக் காட்டினர். ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீர்ர் ரபின்ஹா முதல் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். அதைத்தொடர்ந்து உற்சாகமடைந்து பார்சிலோனா வீரர்கள் பந்தை ஆவேசமாக கடத்தினர். 

36-வது நிமிடத்தில் சவுரோஸ் கொடுத்த “பாஸை” கனக்கச்சிதமாக 2-வது கோலாகா ரபின்வா மாற்றினார். முதல்பாதி நேரம் முடிய சில நிமிடங்கள் இருக்கையில் சவுரோஸ் தனது பங்குக்கு முதல் கோல் அடித்து அணியை 3-0 என முன்னெடுத்துச் சென்றார். 

2-வது பாதியிலும் பார்சிலோனா அணியின் ஆட்டத்தின் முன்,டெபோர்டிவா அணி வீர ர்கள் பெட்டிப்பாம்பாய் அடங்கினர். 58-வது நிமிடத்தில் நட்சத்திர வீர்ர் மெஸ்ஸி, தனக்கே உரிய “ஹெட்புட்” ஷாட்டால் பந்தை கோலுக்குள் தள்ளினார். இதனால் 4-0 என்ற கணக்கில் பார்சிலோனா அணி முன்னிலை பெற்றது. 

ஆட்டம் இறுதிவரை டெபோர்டிவா அணியால் கோல் அடிக்கமுடியவில்லை. இதையடுத்து 4-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா அணி வென்றது. 

இதையடுத்து, புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் பார்சிலோனா அணி 4-ம் இடத்திலும், அட்லெட்டிகோ மாட்ரிட், ரியல்மாட்ரிட் அணி தலா 18 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளன.