messi planned to follow dhoni captaincy
கேப்டன்சியில் தோனியை பின்பற்ற போவதாக உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான மெஸ்சி தெரிவித்துள்ளார்.
களத்தில் பதற்றமோ கோபமோ படாமல் இக்கட்டான தருணங்களையும் கூலாக அணுகி வெற்றியை பறிக்கும் கேப்டன் தோனி, கேப்டன் கூல் என்று அழைக்கப்படுகிறார். கிரிக்கெட் உலகில் அணிகள் பாரபட்சமின்றி பல முன்னாள் கேப்டன்களுக்கும் இந்நாள் கேப்டன்களுக்கும் ஜாம்பவான்களுக்குமே பிடித்த கேப்டன் என்றால் அது தோனி என்கிற அளவுக்கு, தனது திறமையான கேப்டன்சியால் பலரது மனதை கவர்ந்தவர்.
இந்நிலையில், தற்போது கிரிக்கெட் உலகை கடந்து கால்பந்து வீரரான மெஸ்சியும் தோனியை பின்பற்ற போவதாக தெரிவித்திருப்பது தோனிக்கு கூடுதல் பெருமையே. கால்பந்து விளையாட்டில் மிகப்பெரிய ஜாம்பவனான மாரடோனாவுடன் மெஸ்சியை ஒப்பிடும் அளவிற்கு கால்பந்து விளையாட்டில் திறமையானவர் மெஸ்சி. தனது வாரிசு மெஸ்சி என மாரடோனாவே கூறியுள்ளார்.

அந்தளவிற்கு திறமை வாய்ந்த மெஸ்சி, உலகளவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். அதேபோல கிரிக்கெட்டில் உலகளவில் தோனிக்கான ரசிகர் பட்டாளமும் ஏராளம். இந்நிலையில், தோனியின் கேப்டன்சியை பின்பற்ற போவதாக மெஸ்சி கூறியிருப்பது தோனி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.
வரும் 14ம் தேதி கால்பந்து உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மெஸ்சி, தோனியின் கேப்டன்சி அணுகுமுறையை பின்பற்ற போகிறேன். அதனால் நிறைய மாற்றங்கள் நிகழும் என கருதுகிறேன் என தெரிவித்தார்.
