Para Asian Games 2023: பாரா ஆசிய விளையாட்டு – உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!

சீனாவில் ஹாங்சோவில் நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியுள்ளார்.

Mariyappan Thangavelu wons silver medal in Mens High Jump T63 Category in Asian Para Games at Hangzhou rsk

சமீபத்தில் சீனாவில் ஹாங்சோவில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியைத் தொடர்ந்து தற்போது 4 ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்த ஆசிய விளையாட்டு போட்டி வரும் 28ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியாவிலிருந்து 191 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் என்று மொத்தம் 303 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

India vs New Zealand: உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்து டிவிலியர்ஸ் சாதனையை முறியடித்த ஹிட்மேன்!

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கம் உள்பட 72 பதக்கங்களை வென்றது. தற்போது நடந்து வரும் போட்டிகளில் கேனோ, பிளைண்ட் ஃபுட்பால், லான் பவுல்ஸ், ரோயிங் மற்றும் டேக்வாண்டோ ஆகிய ஐந்து விளையாட்டுகள் உட்பட 17 பிரிவுகளில் இந்தியா முதல் முறையாக பங்கேற்கிறது.

கடைசி திக் திக் நிமிடங்கள் – விராட் கோலிக்காகவே ஹாட்ஸ்டார் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கில் பார்த்த 4.3 கோடி ரசிகர்கள்

இந்த நிலையில் தான் ஒரே நாளில் நடந்த போட்டிகளில் இந்தியா 4 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. உயரம் தாண்டுதலில் டி63 பிரிவில் சைலேஷ் தங்கம் வென்ற நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். மேலும், ராம் சிங் வெண்கலம் வென்றார். இப்படி ஒரே போட்டியில் இந்தியா 3 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இதே போன்று மகளிருக்கான படகு போட்டி VL2 பிரிவில் பிரச்சி யாதவ் போட்டி தூரத்தை 1:03.47 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

IND vs NZ: ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை: சனத் ஜெயசூர்யாவின் சாதனை முறியடிப்பு!

உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரோடாகோன் ருஸ்டமோவா 1.02.125 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் கைப்பற்றினார். ஜப்பானைச் சேர்ந்த சகி கோமட்சூ 1:11.635 வினாடிகளில் கடந்து வெண்கலம் கைப்பற்றினார். இதே போன்று F51 கிளப் எறிதல் பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட பிரணவ் சூர்யகுமார் தங்கம் வென்றார். மேலும், தராம்பீர் வெள்ளிப் பதக்கமும், அமித் குமார் சரோஹா வெண்கலப் பதக்கமும் கைப்பற்றியுள்ளனர்.

 பாரா ஆசிய விளையாட்டு, சீனா, உயரம் தாண்டுதல், படகு போட்டி, கிளப் எறிதல், ஹாங்சோ, மாரியப்பன் தங்கவேலு, சைலேஷ் குமார், அமித் குமார் சரோஹா, பிரணவ் குமார், பிரச்சி யாதவ், Para Asian Games, 4th Asian Para Games, Hangzhou, Asian Para Games 2023, Canoe, Blind Football, Lawn Bowls, Rowing, Para Badminton, Para Athletics, Para Table Tennis, Shailesh Kumar, Mariyappan Thangavelu,Prachi Yadav,

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios