many players were bought for the ISL football series

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 4-வது சீசன் கால்பந்து தொடருக்கான வீரர்கள் ஒதுக்கீட்டில் அதிகபட்சமாக அனாஸ் எடதோடிகா, யூஜென்சன் லிங்டோ ஆகியோர் தலா ரூ.1.1 கோடிக்கு வாங்கப்பட்டனர்.

இந்தியன் சூப்பர் லீக் 4-வது சீசன் கால்பந்து தொடர் வரும் நவம்பர் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் ஜாம்ஷெட்பூர், பெங்களூர் அணிகள் புதிதாக களமிறங்குகின்றன.

இந்த நிலையில் அனைத்து அணிகளுக்குமான உள்ளூர் வீரர்கள் ஒதுக்கீடு மும்பையில் நேற்று நடைபெற்றது. அதில் புதிய அணியான ஜாம்ஷெட்பூர் எப்.சி. அனாஸ் எடதோடிகாவை ரூ.1.1 கோடிக்கு வாங்கியது.

அதைத் தொடர்ந்து அட்லெடிகோ டி கொல்கத்தா அணி யூஜென்சன் லிங்டோவை ரூ.1.1 கோடிக்கு வாங்கியது. அதற்கடுத்ததாக இந்தியாவின் தலைசிறந்த கோல் கீப்பர்களில் ஒருவரான சுப்ரதா பாலை ரூ.87 இலட்சத்துக்கு ஜாம்ஷெட்பூர் அணியும், பிரிதாம் கோட்டலை ரூ. 75 இலட்சத்துக்கு டெல்லி டைனமோஸ் அணியும் வாங்கின.

சென்னையின் எப்.சி. அணி தாய் சிங் ரூ.57 இலட்சமும், விக்ரமஜித் சிங் ரூ.53 இலட்சம், தனசந்தனா சிங் ரூ.50 இலட்சம், ஜெர்மன்பிரீத் சிங் ரூ.12 இலட்சம், கார்டோஸா ரூ.30 இலட்சம், பவன் குமார் ரூ.25 இலட்சம், கீனன் அல்மெய்டா ரூ.20 இலட்சம், முகமது ராஃபி ரூ.30 இலட்சம், தனபால் கணேஷ் ரூ.44 இலட்சம், சஞ்சய் பால்முச்சு ரூ.8 இலட்சம், பிரான்சிஸ்கோ பெர்னாண்டஸ் ரூ.20 இலட்சம், ஷாஹின் லால் மெலாலி ரூ.8 இலட்சம் ஆகியோரை வாங்கியுள்ளது.