Manish Pandey is trying hard to catch a spot in the squad for the team.

ஆடும் லெவன் அணியில் எனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க கடுமையாக முயற்சிக்கிறேன் என்று மனிஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றிப் பெற்று தொடரில் 3–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது ஒரு நாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நாளை நடக்கிறது.

போட்டி நாள் அன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே, இந்தியா, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் இந்திய வீரர் மனிஷ் பாண்டே செய்தியாளர்களிடம், “மிடில் வரிசையில் ஆடுவதில் நிச்சயம் நெருக்கடி இருக்கத்தான் செய்யும்.

இன்னும் நிறைய ஆட்டங்களில் விளையாடி, இந்திய அணிக்காக வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆடும் லெவன் அணியில் எனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க கடுமையாக முயற்சிக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.