Maharashtra Open tennis Marin Chile - Giles beat Simon
மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் குரோஷியாவின் மரின் சிலிச் - பிரான்ஸின் கில்லெஸ் சைமன் ஆகியோர் அரையிறுதிச் சுற்றில் மோதுகின்றனர்.
மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னதாக ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டி நடைப்பெற்றது.
இதன் காலிறுதிச் சுற்றில் குரோஷியாவின் மரின் சிலிச் மற்றும் பிரான்ஸின் பியரி ஹியூஜஸ் ஹெர்பர்ட் மோதினர். இதில், பியரி ஹியூஜஸ் ஹெர்பர்ட்டை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் மரின் சிலிச்.
அதேபோல் மற்றொரு காலிறுதியில் பிரான்ஸின் கில்லெஸ் சைமன் மற்றும் ஸ்பெயினின் ராபர்டோ ஒஜிடா லாரா மோதினர்.
இதில், ஸ்பெயினின் ராபர்டோ ஒஜிடா லாராவை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார் கில்லெஸ் சைமன்.
காலிறுதியில் வெற்றிப் பெற்ற குரோஷியாவின் மரின் சிலிச் - பிரான்ஸின் கில்லெஸ் சைமன் ஆகியோர் அரையிறுதியில் மோதுகின்றனர்.
இதனிடையே, மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸின் பெனாய்ட் பேர் 7-5, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ராபின் ஹசீயை வென்றார்.
