Maharashtra Open tennis Marilyn Chirichi top seeded in the lead over Gilles Simon ...
மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முதல் வீரராக முன்னேறினார் பிரான்ஸின் கில்லெஸ் சைமன்.
மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்று ஒன்றில் உலகின் 6-ஆம் நிலை வீரரும், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் வீரரான மரின் சிலிச்சும், உலகின் 89-ஆம் நிலை வீரரான கில்லெஸ் சைமனும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மரிச் சிலிச்சை, சைமன் வீழ்த்தி முதல் வீரராக இறுதி சுற்றுக்கு முன்னேறினார்..
கில்லெஸ் சைமன் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏடிபி உலக டூர் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது இது முதல் முறையாகும்.
இதனிடையே, பிரான்ஸின் பெனாய்ட் பேர், தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சன் மோதும் மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெறும் வீரருடன் இறுதிச்சுற்றில் சைமன் போட்டியிடுவார் என்பது கொசுறு தகவல்.
