Maharashtra Open Tennis Indian batsman Ramkumar Ramanathan made the first round of the match
மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் தனது முதல் சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
தெற்காசியாவின் ஒரே ஏடிபி டென்னிஸ் போட்டியான மகாராஷ்டிர ஓபன், புணேவில் நேற்றுத் தொடங்கியது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன் தனது முதல் சுற்றில் உலகின் 106-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்டோ கார்பலஸ் பேனாவுடன் மோதினார்.
இதில் ராம்குமார் 7-6(4), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய ராம்குமார் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொள்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் பியரி ஹியூஜஸ் ஹெர்பர்ட், இத்தாலியின் மார்கோ செச்சினாட்டோவை 7(4)-6, 6(6)-7, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
மற்றொரு பிரான்ஸ் வீரரான கில்லெஸ் சைமன் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டென்னைஸ் சேன்ட்க்ரெனை தோற்கடித்தார்.
