Maharashtra Open Tennis India Yuki Bhambri advanced to next level
மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி சகநாட்டவரான அர்ஜுன் காதேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இதன் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அர்ஜுன் காதேவை எதிர்கொண்டார் யூகி பாம்ப்ரி. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி, 6-3, 6-4 என்ற செட் கணக்கில், சகநாட்டவரான அர்ஜுன் காதேவை வீழ்த்தினார்.
இன்று நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பி.ஹெச்.ஹெர்பெர்டை எதிர்கொள்கிறார் யூகி.
இதனிடையே, மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இவாஷ்காவை எதிர்கொண்டார் சுமித் நாகல்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் இவாஷ்கா கைப்பற்றினார். அதற்கு அடுத்த செட்டையும் அவர் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால், நாகல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
