Chess World Cup: முதல் முறையாக FIDE World Cup சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன்: பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி!
உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில் முதல் முறையாக கார்ல்சன் ஃபிடே உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் டைட்டில் வென்றார்.
உலகின் நம்பர் 1 வீரரும் 5 முறை சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் மற்றும் சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா இருவரும் உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் டை பிரேக்கர் சுற்றில் மோதினர்.உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் டை பிரேக்கர் சுற்று விறுவிறுப்பாக நடந்தது. இதில், உலகின் நம்பர் 1 வீரரும் 5 முறை சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் மற்றும் 18 வயது நிரம்பிய பிரக்ஞானந்தாவும் விளையாடினர்.
தோனியின் சிக்ஸரை மட்டுமே பேசுகிறார்கள், மற்ற வீரர்கள் விளையாடவில்லையா? கௌதம் காம்பீர் விமர்சனம்!
ஒயிட் காயின் வைத்து பிரக்ஞானந்தா விளையாடினார். டை பிரேக்கர் சுற்றை பிரக்ஞானந்தா தனது கட்டுப்பாட்டில் வைத்து விளையாடினார். ஆரம்பம் முதலே பொறுமையாகவும், நிதானமாகவும் ஆடி வந்தார். எனினும், முதல் டை பிரேக்கரில் பிரக்ஞானந்தாவை, உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் வீழ்த்தினார். இதையடுத்து, 2ஆவது டை பிரேக்கர் நடந்தது. இதில், கண்டிப்பான முறையில் பிரக்ஞானந்தா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். எனினும், இந்த 2ஆவது டை பிரேக்கர் சுற்றானது டிராவில் முடிந்த நிலையில், மேக்னஸ் கார்ல்சன் முதல் முறையாக FIDE World Cup சாம்பியனானார்.