Madurai team knocked out the new trophy.
புதுகை கோப்பைக்கான நான்காம் ஆண்டு மாநில ஆடவர் கூடைப்பந்து போட்டியில் மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
புதுக்கோட்டை கூடைப்பந்து விளையாட்டு கழகம் சார்பில், புதுகை கோப்பைக்கான நான்காம் ஆண்டு மாநில ஆடவர் கூடைப்பந்து போட்டி புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் நான்கு நாட்கள் நடைப்பெற்றது.
இந்தப் போட்டியில் கன்னியாகுமரி, தஞ்சாவூர், ராமநாதபுரம், அரியலூர், சென்னை, நாகப்பட்டினம், தேனி, புதுக்கோட்டை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன.
தொடக்க ஆட்டத்தில் கன்னியாகுமரி அணி 44-28 என்ற புள்ளிகள் கணக்கில் கும்பகோணம் அணியை வென்றது.
இரண்டாவது போட்டியில் நாகப்பட்டினம் அணி, பரமக்குடி அணியை வீழ்த்தியது.
ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மதுரை அணி, கரூர் அணியை வீழ்த்தி வாகைச் சூடியது. மழை பெய்ததால் இரண்டாம் பரிசு கரூர், திண்டுக்கல் அணிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.வாஞ்சிநாதன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பங்கேற்று வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினார்.
