Madrid Open tennis French Open champion Jelena Osabenko fails
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் ஜெலனா ஓசபென்கோ, முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஜெலனா ஓசபென்கோ, ருமேனியாவின் இரினா கமிலியா மோதினர்.
இதில், ஓசபென்கோ 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் இரினா கமிலியாவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
கடந்த பிரெஞ்சு ஓபன் போட்டிகளின் போது அதிரடியாக ஆடிய ஜெலனா இப்போட்டியில் இரினாவின் ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் வீழ்ந்தது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோ, கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீனஸ் வில்லியம்ஸ், அனெட் கொண்விட்டிடுடன் மோதினார். இதில், 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அனெட் கொண்விட்டிடம் தோல்வியுற்று வெளியேறினார் வீனஸ்.
உலக நான்காம் நிலை வீராங்கனை எலினா விடோலினா, முன்னாள் முதல்நிலை வீராங்கனை கரோலினா பிஸ்கோவா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
