lungi ngidi impressed dhoni in south africa series itself

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின்போதே லுங்கி நிகிடி பவுலிங்கில், தான் கவரப்பட்டதாக தோனி தெரிவித்துள்ளார்.

சென்னை டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில், சிறப்பாக பந்துவீசிய லுங்கி நிகிடி 4 ஓவர்களுக்கு 26 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட லுங்கி நிகிடி, நேற்றைய டெல்லி போட்டியில் தான் முதன்முறையாக களமிறங்கினார். ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகு, ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஐபிஎல்லில் ஆடுவதற்காக இந்தியா வந்தார் லுங்கி நிகிடி. ஆனால், அவரது தந்தை இறந்துவிட்டதால், தென்னாப்பிரிக்காவிற்கு சென்றுவிட்டார். அதனால் முதல் 7 போட்டிகளில் அவர் ஆடவில்லை.

டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கலந்துகொண்ட லுங்கி நிகிடி, சிறப்பாக பந்துவீசினார். 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். முக்கியமான விக்கெட்டான ரிஷப் பண்ட்டின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இந்த போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்கு பின்னர் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, லுங்கி நிகிடி சிறப்பாக பந்துவீசினார். அவர் இதேபோலவே தொடர்ந்து சிறப்பாக பந்துவீசினால் அணிக்கு சிறப்பானதாக அமையும். தென்னாப்பிரிக்க தொடரின்போதே நிகிடியின் பந்துவீச்சு என்னை கவர்ந்தது என தோனி தெரிவித்தார்.