இந்தியா 687 ஓட்டங்களை எடுத்து டிக்ளேர் செய்ததை தொடர்ந்து வங்கதேசம் கைவசம் 5 விக்கெட்டுகளை கொண்டு 257 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி பெறலாம்.

வங்கதேசம் – இந்தியா அணிகள் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாதில் நடைபெற்று வருகிறது.

இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 166 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 687 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் கேப்டன் கோலி 204, முரளி விஜய் 108, ரித்திமான் சாஹா ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்கள் குவித்தனர்.

வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், மெஹதி ஹசன் மிராஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 127.5 ஓவர்களில் 388 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

முஷ்பிகுர் ரஹிம், 235 பந்துகளில் சதமடித்தார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 5-ஆவது சதமாகும். கடைசி விக்கெட்டாக முஷ்பிகுர் ரஹிம் ஆட்டமிழந்தார். அவர் 262 பந்துகளில் 2 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 127 ஓட்டங்கள் குவித்தார்.

இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 299 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, வங்கதேசத்துக்கு "பாலோ-ஆன்' கொடுக்காமல் 2-ஆவது இன்னிங்ஸை ஆடியது.

இந்தியா 29 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கேப்டன் கோலி.

இதையடுத்து 459 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி, 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்கள் எடுத்தது.

மகமதுல்லா 9, ஷகிப் அல்ஹசன் 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

வங்கதேச அணி வெற்றி இலக்கை எட்டுவதற்கு கடைசி நாளில் 257 ஓட்டங்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.

ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிவிட்டதால் இந்திய அணி வெல்வது உறுதி.