Leander payas came before top 50 in the International Tennis Rankings

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் முதல் 50 இடங்களுக்குள்ளாக அதாவது 47-வது இடத்தை பிடித்து முன்னேறியுள்ளார்.

நியூபோர்ட் பீச் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் தனது அமெரிக்க இணையான ஜேம்ஸ் செரட்டானியுடன் இணைந்து சாம்பியன் ஆனார்.

இதில் கிடைத்த 125 தரவரிசை புள்ளிகள் மூலமாக 14 இடங்கள் முன்னேற்றம் கண்டு மீண்டும் முதல் 50 இடங்களுக்குள்ளாக லியாண்டர் இடம் பிடித்துள்ளார்.

சர்வதேச இரட்டையர் தரவரிசையில், இந்திய வீரர்கள் வரிசையில் ரோஹன் போபண்ணா ஓரிடம் இழந்து 20-வது இடத்துடன் முதன்மை வகிக்கிறார்.

அடுத்தபடியாக திவிஜ் சரண் 3 இடங்கள் முன்னேறி, தனது தரவரிசை வரலாற்றில் முதல் முறையாக 45-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

ஒற்றையர் தரவரிசையில், ஆஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறிய யூகி பாம்ப்ரி 8 இடங்கள் ஏற்றம் கண்டு 118-வது இடத்தில் உள்ளார்.

ராம்குமார் ராமநாதன் ஓரிடம் முன்னேறி 140-வது இடத்திலும், சுமித் நாகல் ஓரிடம் இழந்து 218-வது இடத்திலும், பிரஜனேஷ் கன்னேஸ்வரன் மூன்று இடங்கள் ஏற்றம் கண்டு 244-வது இடத்திலும், ஸ்ரீராம் பாலாஜி இரண்டு இடம் முன்னேறி 391-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.