kohli will beat sachin record said ganguly

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனை நிகழ்த்திவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படுகிறார். அணியின் வெற்றிக்கு தன்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பதோடு சாதனைகளையும் குவித்து வருகிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரைசதத்துடன் 558 ரன்கள் குவித்து அசத்தினார். 35 ஒருநாள் சதங்களுடன் சச்சினுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தற்போதைய சூழலில், சர்வதேச அளவில் அசாத்தியமான பேட்ஸ்மேனாக கோலி திகழ்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில், பாண்டிங், ஜெயசூர்யா போன்ற ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி சச்சினுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார் கோலி.

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்துள்ள சச்சின், ஒருநாள் போட்டியில் மட்டும் 49 சதங்களை குவித்துள்ளார். கோலி இப்போதே 35 சதங்களை குவித்து விட்டார். எனவே விரைவில் சச்சினின் சத சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கங்குலி, ஒருநாள் போட்டிகளில் சச்சினின் சத சாதனையை கோலி விரைவில் முறியடிப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.