kohli second rank in icc test rankings

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி இரண்டாமிடத்தில் நீடிக்கிறார். 

மிகச்சிறந்த சமகால கிரிக்கெட் வீரர்களாகத் திகழ்பவர்கள் விராட் கோலியும் ஸ்டீவ் ஸ்மித்தும். இந்திய கேப்டன் கோலியும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தும் மிகச்சிறந்த வீரர்களாகவும் கேப்டன்களாகவும் திகழ்கின்றனர். புதிய கிரிக்கெட் சாதனைகளை படைப்பதில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், விராட் கோலி மீண்டும் இரண்டாமிடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் ஸ்மித் நீடிக்கிறார்.

947 புள்ளிகளுடன் ஸ்மித் முதலிடத்திலும் 893 புள்ளிகளுடன் கோலி இரண்டாமிடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் புஜாரா மூன்றாமிடத்தில் உள்ளார். 

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தில் உள்ளார். அவர் 892 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் வங்கதேச ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய வீரர் அஸ்வின் 3-வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 4-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ரங்கனா ஹெராத் 6-வது இடத்திலும் உள்ளனர்.