kohli is going to beat dhoni

ஒவ்வொரு போட்டியிலும் ஒரு சாதனை என உலகின் தலைசிறந்த வீரராக வலம் வருகிறார் கோலி. ஆட்டத்துக்கு ஆட்டம் சதம் அல்லது சதத்தை நெருங்குவது என தென்னாப்பிரிக்காவை தெறிக்க விட்டு வருகிறார் கோலி.

முதல் போட்டியில் சதம், இரண்டாவது போட்டியில் 46 நாட் அவுட், மூன்றாவது போட்டியில் அவுட்டாகாமல் 160, நேற்று நடந்த நான்காவது போட்டியில் 75 ரன்கள் என ரன்களை கோலி வாரி குவித்து வருகிறார். ரன் மெஷின் என வர்ணிக்கப்படுகிறார் கோலி. 

வெறும் 206 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, இதுவரை 34 சதங்களை அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோலி. பாண்டிங், சங்கக்கரா போன்ற வீரர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி கோலி முன்னிலை வகிக்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பட்டியலில் சச்சின், கங்குலி, டிராவிட், தோனி ஆகியோருக்கு அடுத்தபடியாக கோலி இருக்கிறார். 

313 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 9780 ரன்களை குவித்துள்ளார். 206 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 9423 ரன்களை குவித்துள்ளார்.

தோனிக்கும் கோலிக்கும் இடையே வெறும் 347 ரன்கள் மட்டுமே வித்தியாசம். இந்த ரன்களை விரைவில் அடித்து தோனியை கோலி முந்திவிடுவார். மிடில் ஆர்டரில் தோனி களமிறங்குவதால் பல போட்டிகளில் பேட்டிங் ஆட முடியாத நிலை இல்லாததும் தோனி அதிக ரன்கள் குவிக்க முடியாத நிலை உள்ளது.