kohli got first place in bating

சர்வதேச கிரிக்கெட் குழு தரவரிசையில் பேட்டிங்கில் கோலியும், பௌலிங்கில் ஜஸ்ப்ரீத் பூம்ராவும் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் குழு (ஐசிசி) நேற்று வெளியிட்ட டி-20 பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

நியூஸிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில், கோலி மொத்தம் 104 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் 13 புள்ளிகள் அதிகம் பெற்ற அவர், டி-20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையிலும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபின்ச் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மூன்று இடங்கள் முன்னேறி 21-வது இடத்தையும், ஷிகர் தவன் 20 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தரவரிசையில், நியூஸிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் காலின் மன்ரோ 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதேபோன்று பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்ப்ரீத் பூம்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் இரண்டு இடங்கள் முன்னேறி 26-ஆவது இடத்தைப் பிடித்தார். சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திரே சாஹல் 22 இடங்கள் முன்னேறி 30 -வது இடத்தையும், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் 17 இடங்கள் முன்னேறி 62-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்தியாவிடம் நியூஸிலாந்து அணி தோல்வி அடைந்ததை அடுத்து, ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி முதலிடத்துக்கு முன்னேறியது.

முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்து அணி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மேற்கு இந்திய தீவுகள் அணி 3-வது இடத்திலும், இங்கிலாந்து 4-வது இடத்திலும் இந்தியா 3 புள்ளிகள் பெற்று, 5-வது இடத்திலேயே நீடிக்கிறது.