Asianet News TamilAsianet News Tamil

2015ல் டிவில்லியர்ஸிடம் வாங்கியதை 2018ல் திருப்பி கொடுத்த கோலி!!

kohli gave back to devilliers after three years
kohli gave back to devilliers after three years
Author
First Published Feb 20, 2018, 4:41 PM IST


தென்னாப்பிரிக்காவை 5-1 என வீழ்த்திய இந்திய அணி, தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் தொடரை வென்று சாதனை படைத்தது.

கோலியின் சிறப்பான பேட்டிங், சாஹல் மற்றும் குல்தீப்பின் அசத்தல் பவுலிங் ஆகியவையே இந்திய அணி அபார வெற்றி பெற்றதற்கான காரணங்கள். அதிலும் கோலி, இந்த தொடரில் பல சாதனைகளை புரிந்தார்.

மூன்று சதங்கள், ஒரு அரைசதம் உட்பட 558 ரன்களை குவித்தார் கோலி. கடந்த 2015ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி இந்தியா வந்தபோது, அந்த அணியின் அப்போதைய கேப்டன் டிவில்லியர்ஸ், மூன்று சதங்கள் அடித்தார்.

kohli gave back to devilliers after three years

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என தென்னாப்பிரிக்கா வென்றது. அந்த 5 போட்டிகளில் டிவில்லியர்ஸ் 3 சதங்கள் விளாசினார். 

நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய கேப்டன் விராட் கோலி மூன்று சதங்களை அடித்து பதிலடி கொடுத்தார். அந்த அணி, 3-2 என்றுதான் தொடரை வென்றது. ஆனால் இந்திய அணியோ 5-1 என தொடரை வென்று மிரட்டியது.

kohli gave back to devilliers after three years

2015ல் இந்திய அணி பந்துவீச்சை சிதறடித்த டிவில்லியர்ஸுக்கு 2018ல் அந்த அணியின் பந்துவீச்சை பறக்கவிட்டு விராட் கோலி பதிலடி கொடுத்து தொடரை வென்றுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios