kohli and murali vijay century in third test
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் கோலி மற்றும் முரளி விஜய் அபார சதமடித்து அதிரடியாக ஆடி வருகின்றனர்.
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும் ஷிகர் தவானும் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய தவான், 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய புஜாராவும் 23 ரன்களில் வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து கேப்டன் கோலி களமிறங்கினார். கோலியும் முரளி விஜயும் அதிரடியாக ஆடினர். கடந்த போட்டியில் சதமடித்த முரளி விஜய், இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி சதமடித்தார்.

அவரைத்தொடர்ந்து அதிரடியாக ஆடிய கேப்டன் கோலியும் சதமடித்தார். இருவரும் சதமடித்ததைத் தொடர்ந்து அதிரடியாக ஆடிவருகின்றனர். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 200 ரன்களைக் குவித்து தொடர்ந்து ஆடிவருகிறது.

66 ஓவருக்கு இந்திய அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 283 ரன்களை எடுத்துள்ளது. முரளி விஜய் 127 ரன்களுடனும் கோலி, 106 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
