ஐபிஎல் 11வது சீசனின் 13வது போட்டியில் டெல்லி அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் காம்பீர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி வீரர் நிதிஷ் ராணாவின் அரைசதம், ரசலின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 200 ரன்கள் குவித்தது. 

201 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில், மேக்ஸ்வெல் மற்றும் ரிஷப் பண்ட்டைத் தவிர மற்ற வீரர்கள் யாருமே சொல்லும்படி ஆடவில்லை. இதனால் அந்த அணி 15வது ஓவரிலேயே வெறும் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளிடம் தோல்வியை தழுவியது. பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளை வீழ்த்தியுள்ளது.

மூன்று வெற்றிகளுடன் ஹைதராபாத் அணி முதலிடத்திலும், கொல்கத்தா இரண்டாவது இடத்திலும் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் முறையே 3 மற்றும் 4வது இடத்தை பிடித்துள்ளன.

மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வியை தழுவிய நடப்பு சாம்பியனான மும்பை அணி, கடைசி இடத்தில் உள்ளது.

இன்று மும்பை அணி, பெங்களூருவை எதிர்கொள்கிறது.