King Kohli new Tattoo spreading Photos - Fans Curiosity ...

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான கிங் கோலி தனது உடம்பில் மீண்டும் புதிய டாட்டூ ஒன்றை வரைந்து கொண்டார். 

கிரிக்கெட் ரசிகர்களால் 'கிங் கோலி' என்று செல்லமாக அழைக்கப்படுபவர் கோலி. விளையாட்டு வீரர்களுக்கே உரிய ஃபிட்னஸ் விஷயங்களில் அக்கறை காட்டுவதுடன், விளம்பரங்களில் நடிப்பதாலும், உடல் அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவார் கோலி. 

இந்த நிலையில் அண்மையில் மும்பையில் உள்ள ஒரு டாட்டூ கடைக்குச் சென்று தனக்கு விருப்பமான ஒரு சின்னத்தை டாட்டூ போட்டுக் கொண்டார் கோலி. 

அதனை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். டாட்டூ கடையில் எடுக்கப்பட்ட விராட் கோலியின் புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.

மும்பை பாந்த்ராவில் உள்ள ‘ஏலியன்ஸ் டாட்டூ’ எனும் கடைக்குச் சென்ற கோலி, அங்கு புதிய டாட்டூ வரைந்து கொண்டார். அவரது உடலில் ஏற்கெனவே விதவிதமான டாட்டூக்கள் இடம்பெற்றுள்ளன.

சிவன் கைலாய மலையில் தவம் செய்யும் உருவம், அதன் பின்புலத்தில், மானஸரோவர் மலையும் டாட்டூவாக அவர் மீது உள்ளது. அடுத்து தனது அம்மா அப்பாவின் பெயர்களை பச்சை குத்தியிருக்கிறார். இன்னுமொரு டாட்டூவில் ஒரு நாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஜெர்சி எண்ணை பதிய வைத்துள்ளார். கோல்டன் ட்ராகன், ஸ்கார்பியோ, சாமுராய் வீரன் என இதுவரை எட்டு டாட்டூக்களை தனது உடலில் வரைந்துள்ளார் கோலி.

தற்போது, அவரது இடது தோள்பட்டையில் ஏற்கனவே இருந்த ‘Gods eye’ என்ற டாட்டூவைச் சுற்றி மேலும் சில டிசைன்களை வரைந்துள்ளார் கோலி.