kids won gold in the state swimming competition are the ones who ...

மாநில நீச்சல் போட்டியில் சிறுமியர் பிரிவில் பாவிகா துகார் ஆதித்யா, க்ஷியா ஈஷ்வர் பிரசாத், அகமது அஸ்ரக், விசேஷ் பரமேஸ்வர், சிறுமியரில் பிரியங்கா புகழரசு ஆகியோர் தங்கம் பெற்றனர்.

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் 35-வது சப்-ஜூனியர் 45-வது ஜூனியர் மாநில நீச்சல் போட்டிகள் சென்னை, வேளச்சேரியில் உள்ள சர்வதேச நீச்சல்குள வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 

இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்ற குரூப் 1 சிறுமியர் பிரிவில் பாவிகா துகார் (ஜென்னிஸ் கிளப்) 800 மீட்டர், ப்ரீஸ்டைல் நீச்சலில் புதிய சாதனை படைத்தார். 

முதல் நாளில் இவர் 1500 மீட்டர் ப்ரீஸ்டைல் நீச்சலில் புதிய சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல முதல் நாளில் 100 மீட்டர் பிரஸ்ட்ரோக்கில் சாதனை படைத்த க்ஷியா ஈஷ்வர் பிரசாத் நேற்று 50 மீட்டர் பிரஸ் ஸ்ட்ரோக்கில் புதிய சாதனை படைத்து அசத்தினார்.

இதுதவிர சிறுவர்கள் பிரிவில் ஆதித்யா (டி.எஸ்.பி.ஏ.) 100 மீட்டர், பிரஸ்ட்ரோக், 100 மீட்டர் பட்டர்பிளை ஆகிய பிரிவுகளிலும், அகமது அஷ்ரக் (டர்ட்ல்ஸ்) 800 மீட்டர் ப்ரீஸ்டைல், 400 மீட்டர் மெட்லி ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்று இரட்டை தங்கம் வென்றனர். 

விசேஷ் பரமேஷ்வர் (பிரைம் ஸ்டார்) 100 மீட்டர் ப்ரீஸ்டைல், 100 மீட்டர் பிரஸ்ட்ரோக் ஆகிய பிரிவுகளிலும் வெற்றி பெற்று இரட்டை தங்கம் வென்றனர்.

அதேபோன்று, சிறுமியர் பிரிவில் பிரியங்கா புகழரசு (டி.எஸ்.என்) 100 மீட்டர் பட்டர்பிளை, 50 மீட்டர் ப்ரீஸ்டைல் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்று இரட்டை தங்கம் வென்றார்.