Kenya victory over China thaibe defeat in international football match
கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டியில் சீனதைபேவை வீழ்த்தி கென்யா அபார வெற்றி பெற்றது.
கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது. நான்கு அணிகள் பங்கேற்ற கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டியில் நேற்றிரவு கடைசி லீக் ஆட்டம் நடந்தது.
இதில் கென்யா மற்றும் சீனதைபே மோதின. இதில் கென்யா அணி 4–0 என்ற கோல் கணக்கில் சீனதைபேயை வீழ்த்தியது.
அந்த அணியில் ஒடியம்போ 52–வது நிமிடத்திலும், ஜாக்கின்ஸ் அதுடோ 55 மற்றும் 88–வது நிமிடத்திலும், ஒட்டியானோ 70–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
லீக் முடிவில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தது.
இதையடுத்து கோல் வித்தியாசம் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா, கென்யா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது.
