Asianet News TamilAsianet News Tamil

கேட்ச்சை விட்ட கேதர் ஜாதவ்.. வில்லியம்சனுக்கு வில்லன் விஜய் சங்கர் தான்!!

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் விஜய் சங்கரின் பவுலிங்கின் விரைவில் விழ வேண்டிய வில்லியம்சன், அதிலிருந்து தப்பி அரைசதம் அடித்தார். எனினும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் விஜய் சங்கரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 
 

kedar dropped williamson catch and finally got by vijay shankar
Author
New Zealand, First Published Jan 23, 2019, 10:12 AM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் விஜய் சங்கரின் பவுலிங்கின் விரைவில் விழ வேண்டிய வில்லியம்சன், அதிலிருந்து தப்பி அரைசதம் அடித்தார். எனினும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் விஜய் சங்கரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

நேப்பியரில் இன்று காலை இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக மார்டின் கப்டிலும் கோலின் முன்ரோவும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரை வீசிய ஷமி, அந்த ஓவரில் கப்டிலை போல்டாக்கி அனுப்பினார். 

kedar dropped williamson catch and finally got by vijay shankar

இதையடுத்து தனது அடுத்த ஓவரிலேயே கோலின் முன்ரோவையும் 8 ரன்களில் போல்டாக்கினார். 4 ஓவரிலேயே முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி. தனது முதல் இரண்டு ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஷமி. 

2 விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்ட நிலையில், கேன் வில்லியம்சனுடன் அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். கேன் வில்லியம்சன் - ரோஸ் டெய்லர் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. அபாயகரமான இந்த ஜோடியை, பார்ட்னர்ஷிப் அமைக்கும் முன்னதாகவே நல்ல வேளையாக சாஹல் பிரித்துவிட்டார். 15வது ஓவரில் சாஹலின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் டெய்லர். 24 ரன்களில் டெய்லர் வெளியேற, டாம் லதாமும் சாஹல் பந்தில் அவரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

kedar dropped williamson catch and finally got by vijay shankar

கேதர் ஜாதவின் பவுலிங்கில் ஹென்ரி நிகோல்ஸ் 12 ரன்களிலும் ஷமியின் பந்தில் சாண்ட்னெர் 14 ரன்களிலும் ஆட்டமிழக்க, அந்த அணி 30 ஓவர்களுக்கு உள்ளாக 133 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் தனி ஒருவராக ஆடிய கேப்டன் வில்லியம்சன், அரைசதம் கடந்தார். வில்லியம்சனை விரைவில் வீழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது. விஜய் சங்கர் வீசிய 16வது ஓவரின் கடைசி பந்தில் வில்லியம்சன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கேதர் ஜாதவ் தவறவிட்டார். அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்ட வில்லியம்சன், களத்தில் நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். ஆனால் அதை அவர் பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. 64 ரன்களில் குல்தீப் யாதவின் பவுலிங்கில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

விஜய் சங்கரின் பவுலிங்கில் விழ வேண்டிய வில்லியம்சன், அதிலிருந்து தப்பினாலும் கடைசியில் விஜய் சங்கரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து குல்தீப்பின் பந்தில் பிரேஸ்வெல்லும் ஆட்டமிழக்க, 148 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது நியூசிலாந்து அணி. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios