வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 4ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. 

அதற்கு முன்னதாக போர்டு பிரசிடெண்ட் லெவன் அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பயிற்சி போட்டி ஒன்றில் ஆடுகிறது. அந்த பயிற்சி போட்டி வரும் 29ம் தேதி வடதோராவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் போர்டு பிரசிடெண்ட் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அணிக்கு கருண் நாயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கருண் நாயர் தலைமையிலான இந்த அணியில் பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, மயன்க் அகர்வால், இஷான் கிஷான் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

துலீப் டிராபியில் சிறப்பாக ஆடிய தமிழக வீரர் விக்னேஷுக்கும் இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த கருண் நாயருக்கு ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கருண் நாயருக்கு ஆட வாய்ப்பளிக்கப்படாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டிக்கான போர்டு பிரசிடெண்ட் லெவன் அணிக்கு கருண் நாயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கண்டிப்பாக கருண் நாயருக்கு ஆட வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டிக்கான அணி விவரம்:

கருண் நாயர் (கேப்டன்), மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி, ஷ்ரேயாஸ் ஐயர், அன்கித் பானே, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சக்சேனா, சவுரப் குமார், பசில் தம்பி, அவேஸ்கான், கே.விக்னேஷ், இஷான் பொரேல்