Asianet News TamilAsianet News Tamil

யாரையுமே மதிக்கல.. நியூசிலாந்து கேப்டனின் அலப்பறையை இந்த வீடியோவில் பாருங்க

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பிறகு, இறுதியாக பரிசளிப்பு விழாவில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதோடு அதிருப்தியடையவும் செய்துள்ளது.
 

kane williamson shocked all by his activities in post match presentation
Author
UAE, First Published Dec 8, 2018, 5:12 PM IST

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பிறகு, இறுதியாக பரிசளிப்பு விழாவில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதோடு அதிருப்தியடையவும் செய்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து பாகிஸ்தான் வென்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமனானது. 

இதையடுத்து நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என நியூசிலாந்து அணி வென்றது. தொடர் முடிந்தபிறகு பரிசளிப்பு விழா நடந்தது. அப்போது வெற்றி கோப்பையை பெறுவதற்கு நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனை அழைத்த வர்ணனையாளர் ரமீஸ் ராஜா, கோப்பையை வழங்கும் விளம்பரதாரர்களின்(ஸ்பான்ஸர்ஸ்) பெயர்களை படித்தார். இதற்கிடையே கோப்பையை தானாக எடுத்துக்கொண்ட கேன் வில்லியம்சன், கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க சென்றார். அப்போது நியூசிலாந்து வீரர் கையில் வைத்திருந்த பரிசுத்தொகைக்கான விளம்பர அட்டையையும் அவரிடமிருந்து பிடுங்கி எறிந்தார். 

நியூசிலாந்து கேப்டனின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பெரும் விவாதக்களமாகவும் இது மாறியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios