உலக கோப்பை கபடி போட்டியில், வங்காளதேசத்தை தோற்கடித்து இரண்டாவது வெற்றியைப் பெற்றது இந்திய அணி.

மூன்றாவது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்து வருகிறது.
இந்த போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் செவ்வாய்க்கிழமை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 57-20 என்ற புள்ளிக் கணக்கில் வங்காளதேசத்தை தோற்கடித்து. இது இந்தியாவின் 2-வது வெற்றியாகும்.
தொடக்க ஆட்டத்தில் தென் கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது இந்திய அணி.
ஆனால், இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வென்று தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து, இந்திய அணி, வங்காளதேசத்தைத் தோற்கடித்ததன் மூலம் தனது இரண்டாவது வெற்றியை உறுதி செய்தது.
அடுத்த லீக் ஆட்டத்தில் வருகிற 15-ந் தேதி அர்ஜென்டினாவை (இரவு 9 மணி) சந்திக்கிறது இந்திய அணி.
