Asianet News TamilAsianet News Tamil

“நாக் ஔட்” முறையில் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான கபடி போட்டி தொடக்கம்….

Kabaddi competition between engineering colleges in knock out manner ....
Kabaddi competition between engineering colleges in knock out manner ....
Author
First Published Sep 19, 2017, 10:00 AM IST


“நாக் ஔட்” முறையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 14-வது மண்டலத்திற்கு உள்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான கபடி போட்டி பெரம்பலூரில் தொடங்கியது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 14-வது மண்டலத்திற்கு உள்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான கபடி போட்டி பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நேற்றுத் தொடங்கியது.

இந்தப் போட்டியை தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ.சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

இதில் அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 19 பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண்டன.

அண்ணா பல்கலைக்கழக 14-வது மண்டல விளையாட்டுத்துறை தலைவர் செல்லதுரை, மண்டல விளையாட்டு செயலர் ராஜசேகர் ஆகியோர் இந்தப் போட்டிகளை நடத்துகின்றனர்.

“நாக் ஔட்” முறையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் திருச்சி அங்காளம்மன் பொறியியல் கல்லூரி, எம்.ஏ.எம் காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங் கல்லூரி, பெரம்பலூர் சீனிவாசன் பொறியியல் கல்லூரி, ரோவர் பொறியியல் கல்லூரி அணிகள் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன.

அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டம் இன்று நடைபெறும்.

Follow Us:
Download App:
  • android
  • ios