Asianet News TamilAsianet News Tamil

ஐசிசியின் தரவரிசையில் ஆல்ரவுண்டர் பிரிவில் ஜடேஜாவுக்கு தான் முதலிடம்…

Jadeja topped in all rounder category in ICC rankings
Jadeja topped in all rounder category in ICC rankings
Author
First Published Aug 9, 2017, 9:22 AM IST


 

ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் ஆல்ரவுண்டர் பிரிவில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் ஆல்ரவுண்டர் பிரிவில் ஜடேஜா, 438 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில், ஜடேஜா 70 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், இரு இன்னிங்ஸ்களும் சேர்த்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதில் 2-வது இன்னங்ஸில் மட்டும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதால் கிடைத்ததே இந்த முன்னேற்றம்.

வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் தற்போது 431 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

பேட்ஸ்மேன்கள் பட்டியலிலும் ஜடேஜா 9 இடங்கள் முன்னேறி 51-வது இடத்துக்கு வந்துள்ளார்.

பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா ஓரிடம் முன்னேறி 3-வது இடத்துக்கு வந்துள்ளார்.

கேப்டன் கோலி 5-வது இடத்தில் நீடிக்கிறார். அதேபோல், அஜிங்க்ய ரஹானே 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்துக்கு முன்னேற, கே.எல்.ராகுல் 737 புள்ளிகளுடன் 11-ஆவது இடத்தில் உள்ளார்.

விக்கெட் கீப்பரான ரித்திமான் சாஹா, 4 இடங்கள் முன்னேறி 44-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 2-வது இடத்திலும் தொடர்கின்றனர்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இந்தியாவின் மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் ஓரிடம் கீழிறங்கி 3-வது இடத்துக்கு வந்துள்ளார்.

வேகப் பந்துவீச்சாளர்களான முகமது சமி மற்றும் உமேஷ் யாதவ் முறையே 20 மற்றும் 22-வது இடங்களில் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி, பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் முறையாக 21-வது இடத்துக்கு வந்துள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 18-வது இடத்திலும், ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் 4-வது இடத்திலும் உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios