Asianet News TamilAsianet News Tamil

அஷ்வினால் வாய்ப்பு பெறும் ஜடேஜா..?

இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் தவித்துவரும் அஷ்வின், நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகம்தான். அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
 

jadeja may replace ashwin in fourth test match
Author
England, First Published Aug 26, 2018, 10:11 AM IST

இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் தவித்துவரும் அஷ்வின், நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகம்தான். அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. 

முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. 

jadeja may replace ashwin in fourth test match

இந்நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் ஆடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போதே அஷ்வின் மிகவும் அவதிப்பட்டார். முதல் இன்னிங்ஸில் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். இடுப்பு வலியால் பேட்டிங்கிலும் சோபிக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் 23 ஓவர்கள் வீசினார். தனது அருமையான ஸ்பின்னின் மூலம் கடைசி விக்கெட்டான ஆண்டர்சனை வீழ்த்தினார். 

மூன்றாவது போட்டியில் அஷ்வின் இடுப்பு வலியுடன் ஆடிய நிலையில், போட்டி முடிந்ததிலிருந்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 30ம் தேதிதான் அடுத்த போட்டி தொடங்குகிறது என்பதால் அதற்குள் குணமடைந்துவிடுவார் என்று நம்பப்பட்டது. எனினும் போட்டிக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அவர் குணமடைவது சந்தேகம்தான் என கூறப்படுகிறது. எனவே அவருக்கு பதிலாக மற்றொரு அனுபவ ஸ்பின் பவுலரான ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 

jadeja may replace ashwin in fourth test match

நான்காவது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் ஆடினால், வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார் என்பதில் ஐயமில்லை. எனினும் அவர் முழுமையாக குணமடையாமல் அவர் அணியில் ஆடவைக்கப்படமாட்டார். எனினும் வலைப்பயிற்சியின்போது அஷ்வினின் செயல்பாட்டை பொறுத்து அவரை ஆடவைக்கலாமா என்று கடைசியாக முடிவெடுக்கப்படும். 

கருண் நாயர், ஹனுமா விஹாரி ஆகியோர் அணியில் இருந்தாலும், அவர்களை ஆடும் லெவனில் அஷ்வினுக்கு பதிலாக பயன்படுத்த முடியாது. அவர்கள் பேட்ஸ்மேன்கள். ஒரு ஸ்பின் பவுலர் அவசியம் அணியில் தேவை. அந்த வகையில் அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜாதான் களமிறங்க வாய்ப்புள்ளது.  ஜடேஜாவும் அனுபவ வீரர் என்பதால், அஷ்வினின் இடத்தை அவர் பூர்த்தி செய்வார் என்று நம்பலாம். 

Follow Us:
Download App:
  • android
  • ios