Jadeja is the First bowler in bowling
இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 898 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 865 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளார்.
அதேபோன்று ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா தொடர்ந்து 2-வது இடத்திலும், அஸ்வின் தொடர்ந்து 3-வது இடத்திலும் உள்ளனர்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா 4-வது இடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 5-வது இடத்திலும், கே.எல்.ராகுல் ஓர் இடம் முன்னேறி 9-வது இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
