isl update season match started Katrina Kaif - salman khan dance was draw

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் சீசன் - 4 கத்ரினா கைஃப் - சல்மான்கான் ஜோடியின் ஆட்டத்தோடு தொடங்கிய இதன் முதல் ஆட்டம் சமனில் முடிந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் சீசன் - 4 கேரள மாநிலம், கொச்சியில் நேற்றுத் தொடங்கியது.

இந்த சீசனின் முதல் ஆட்டமான அட்லெடிகோ டி கொல்கத்தா - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இடையேயான ஆட்டம் கோல்கள் இன்றி சமனில் முடிந்தது.

முன்னதாக, கொச்சி ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சீசனின் தொடக்க விழா நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், கேரள பிளாஸ்டர்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவருமான சச்சின் டெண்டுல்கர், ஐஎம்ஜி ரிலையன்ஸ் உரிமையாளர் நீதா அம்பானி, மலையாள நடிகர் மம்மூட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக, பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் - சல்மான்கானின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையடுத்து கொல்கத்தா - கேரளா அணிகள் இடையேயான ஆட்டம் தொடங்கியது.

இரண்டு அணிகளுக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே கடுமையாக போராடின. இருந்தபோதும் எந்த அணிக்கும் கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆட்டத்தின் இறுதிவரை இதே நிலை நீடிக்க இந்த சீசனின் முதல் ஆட்டம் கோல்கள் இன்றி சமனில் முடிந்தது.

நடப்பு சாம்பியனான கொல்கத்தாவும், கேரளா அணியும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்று முதல் ஆட்டத்திலேயே நிரூபித்துள்ளனர்.