MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • விவாகரத்து, குடிக்கு அடிமை, பேனிக் அட்டாக்.. மீண்டு வந்த யுஸ்வேந்திர சாஹலின் கண்ணீர் கதை!

விவாகரத்து, குடிக்கு அடிமை, பேனிக் அட்டாக்.. மீண்டு வந்த யுஸ்வேந்திர சாஹலின் கண்ணீர் கதை!

Yuzvendra Chahal: இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் விவாகரத்துக்குப் பிறகு சந்தித்த கஷ்டங்களை மனம் திறந்து பேசியுள்ளார். குடிக்கு அடிமையானதால், தன்னை மீட்க 26 நாட்கள் ரீஹாப் சென்டரில் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 18 2026, 10:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
குடிக்கு அடிமையான யுஸ்வேந்திர சாஹல்
Image Credit : Yuzvendra Chahal

குடிக்கு அடிமையான யுஸ்வேந்திர சாஹல்

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல், விவாகரத்துக்கு பிறகு தன் வாழ்க்கையில் நடந்த பல கசப்பான விஷயங்களை இப்போது வெளியே சொல்லியிருக்கிறார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா நடத்தும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் பேசினார். விவாகரத்துக்குப் பின் குடிக்கு அடிமையானது, மனதளவில் உடைந்து போனது என பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார். கடைசியில் தன் கிரிக்கெட் கரியரை காப்பாற்றிக் கொள்ள, அவரே முன்வந்து மருத்துவ உதவியை நாடியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விவாகரத்துக்குப் பின் மோசமான நிலைமை
Image Credit : Asianet News

விவாகரத்துக்குப் பின் மோசமான நிலைமை

கவுண்டி கிரிக்கெட் விளையாடி முடித்த பிறகு, சாஹலுக்கு குடிப்பழக்கம் ரொம்பவே அதிகமாகிவிட்டது. நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த அவர், ரீஹாப் சென்டரில் (Rehab Centre) சேர முடிவு செய்தார். இதுபற்றி சாஹல் கூறுகையில், "விவாகரத்துக்குப் பிறகு எல்லாமே கைமீறிப் போச்சு. என் மனநிலையும் சரியில்லை. இப்படியே போனால், நான் உயிருக்கு உயிராக நேசிக்கும் கிரிக்கெட்டையே அழிச்சிடுவேன்னு எனக்குப் புரிஞ்சது. அதனாலதான் அந்தப் பழக்கத்தை விட முடிவு பண்ணேன். இப்போ நான் ரொம்ப சந்தோஷமாவும், நல்லபடியாவும் இருக்கேன்" என்றார்.

26 நாட்கள் ரீஹாப் சென்டரில் சாஹல்

இந்தப் பிரச்சனையிலிருந்து வெளியே வர, சாஹல் 26 நாட்கள் ரீஹாப் சென்டரில் தங்கியிருந்தார். இந்த முடிவு தன் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் சொல்கிறார். இப்போது மனதளவில் அவர் ரொம்பவே பக்குவப்பட்டுவிட்டார். தன் உணர்ச்சிகளை முன்பு விட இப்போது நன்றாகவே கட்டுப்படுத்துகிறார். ஐபிஎல் 2026 சமயத்தில் தன் உடல்நிலை முன்பை விட ரொம்ப ஃபிட்டாக இருந்ததாக சாஹல் தெரிவித்தார். ஜிம், ஃபீல்டிங் பயிற்சி என எல்லாவற்றிலும் அவரால் முழு கவனம் செலுத்த முடிந்தது.

34
பதற்றம், பேனிக் அட்டாக் பிரச்சனைகள்
Image Credit : X

பதற்றம், பேனிக் அட்டாக் பிரச்சனைகள்

தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகள், அவருடைய கிரிக்கெட்டையும் பாதித்தது. அந்த நேரத்தில் பதற்றம், பேனிக் அட்டாக் போன்ற பல பிரச்சனைகளை சாஹல் சந்தித்தார். பேனிக் அட்டாக் வரும்போது அவருக்கு இதயத் துடிப்பு அதிகமாகிவிடும். சில நேரங்களில் பேசக் கூட முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். அந்த இருண்ட காலத்தில், அவருடைய குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் தான் அவருக்குப் பக்கபலமாக இருந்தார்கள். அவர்களின் ஆதரவுதான் தன்னை அந்த மோசமான நிலையிலிருந்து வெளியே கொண்டு வந்தது என சாஹல் நெகிழ்ச்சியாகக் கூறினார்.

44
2011-ல் தொடங்கிய ஐபிஎல் பயணம்
Image Credit : Instagram/yuzi_chahal23

2011-ல் தொடங்கிய ஐபிஎல் பயணம்

சாஹல் முதன்முதலில் 2011-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடத் தொடங்கினார். கரியரின் ஆரம்பக் கட்டத்திலேயே பார்ட்டி, குடிப்பழக்கம் என எல்லாமே அவருக்கு அறிமுகமாகிவிட்டது. இதுபற்றிப் பேசும்போது, தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தனக்குக் கொடுத்த அறிவுரையையும் அவர் நினைவுகூர்ந்தார்.

வாழ்க்கையில் ஒரு பேலன்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதை சாஹல் இப்போது புரிந்துகொண்டார். தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சோஷியல் மீடியாவில் வந்த பல விமர்சனங்களையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், இப்போது அந்தப் பழைய கசப்பான நினைவுகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, முழுமையாக கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த சாஹல் முடிவு செய்துள்ளார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI 5th T20: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த மழை.. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர் 2-2 என சமன்!
Recommended image2
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!
Recommended image3
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் வெள்ளை டிரஸ் ஏன்? இந்த சுவாரஸ்யமான வரலாறு தெரியுமா?
Related Stories
Recommended image1
யுஸ்வேந்திர சாஹலின் 87.90 லட்ச ரூபாய் VIP காரில் உள்ள 5 டாப்பு டக்கர் அம்சங்கள்
Recommended image2
சாஹலின் 'அந்த' சர்ச்சைக்குரிய டீ சர்ட்..! விவாகரத்துக்கு காரணம் என்ன? மனமுடைந்து பேசிய தனஸ்ரீ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved