MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs NZ: இந்தியா - நியூசிலாந்து டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம் என்ன?

IND vs NZ: இந்தியா - நியூசிலாந்து டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம் என்ன?

India vs New Zealand T20 Series: இந்தியா, நியூசிலாந்து இடையிலான‌ 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம் என்ன? விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 20 2026, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியா   நியூசிலாந்து டி20 தொடர்
Image Credit : Getty

இந்தியா - நியூசிலாந்து டி20 தொடர்

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சென்று 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 5 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்தியா - நியூசிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 22 (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

முதல் மேட்ச் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக களமிறங்கும் இந்த 16 பேர் கொண்ட இந்திய அணியில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா, அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி போன்ற முக்கிய வீரர்கள் உள்ளனர்.

சமீபத்தில் உள்ளூரில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சஞ்சு சாம்சன் சூப்பராக விளையாடியதால், அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல, நியூசிலாந்து மண்ணில் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்ற ஆர்வமும் ரசிகர்களிடம் எகிறியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
டி20 தொடர் நடக்கும் மைதானங்கள் எவை?
Image Credit : Getty

டி20 தொடர் நடக்கும் மைதானங்கள் எவை?

இந்தத் தொடரின் முதல் இரண்டு டி20 போட்டிகள் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இரண்டாவது மேட்ச் சனிக்கிழமை நடைபெறும். அதன்பிறகு, மூன்றாவது போட்டி வெலிங்டனில் உள்ள என்.ஆர்.ஒய் (NRY) மைதானத்தில் (அக்டோபர் 27), நான்காவது போட்டி ஆக்லாந்தின் ஈடன் பார்க்கில் (அக்டோபர் 30) மற்றும் கடைசிப் போட்டி ஹாமில்டனில் உள்ள செடன் பார்க்கில் (நவம்பர் 1) நடைபெற உள்ளன.

34
போட்டிகள் தொடங்கும் நேரம்? எந்த டிவியில் பார்க்கலாம்?
Image Credit : Getty

போட்டிகள் தொடங்கும் நேரம்? எந்த டிவியில் பார்க்கலாம்?

இந்த தொடரின் அனைத்து டி20 போட்டிகளும் நியூசிலாந்து உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணிக்கும் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கும் ஆரம்பமாகும். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் (Sony Sports Network) இந்த மேட்ச்களை லைவாக பார்க்கலாம்.

சோனி லிவ் (Sony Liv) ஆப் மற்றும் வெப்சைட்டிலும் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். நியூசிலாந்தில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் (Sky Sports) சேனலிலும், அமெரிக்கா மற்றும் கனடாவில் வில்லோ டிவியிலும் (Willow TV) இந்தப் போட்டிகள் ஒளிபரப்பாகும்.

44
சொந்த செலவில் 5 நெட் பவுலர்களை அழைத்துச் செல்லும் கில்
Image Credit : Rediff

சொந்த செலவில் 5 நெட் பவுலர்களை அழைத்துச் செல்லும் கில்

இந்திய ஓடிஐ அணி மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில், நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்காக 4-5 நெட் பவுலர்களை தன்னுடன் நியூசிலாந்துக்கு அழைத்துச் செல்கிறார். இவர்களுக்கான முழு செலவையும் கில்லே ஏற்றுக்கொள்கிறார்.

வெளிநாட்டுப் பயணங்களின் போது வீரர்களின் வசதிக்காக தனியாக நெட் பவுலர்களை பிசிசிஐ ஏற்பாடு செய்வது வழக்கம். ஆனால், ஒரு வீரர் தனது சொந்த செலவில் நெட் பவுலர்களை அழைத்துச் செல்வது இதுவே முதல் முறை. சுப்மன் கில் அக்டோபர் 23 அல்லது 24-ம் தேதியே நியூசிலாந்துக்கு கிளம்புகிறார். அங்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்காக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் அணி
விளையாட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sanju Samson Watch Jailer 2: ஜெயிலர் 2 படம் பார்க்க 2 தியேட்டர்களை ஒட்டுமொத்தமா புக் பண்ணிய சஞ்சு சாம்சன்!
Recommended image2
விவாகரத்து, குடிக்கு அடிமை, பேனிக் அட்டாக்.. மீண்டு வந்த யுஸ்வேந்திர சாஹலின் கண்ணீர் கதை!
Recommended image3
IND vs WI 5th T20: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த மழை.. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர் 2-2 என சமன்!
Related Stories
Recommended image1
IND vs WI 4th T20: 2 அதிரடி மாற்றம்.. வைபவ் சூர்யவன்ஷி கம்பேக்.. சிக்சர் மன்னனுக்கு இடமில்லை.. பிளேயிங் லெவன்!
Recommended image2
IND vs WI 5th T20: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த மழை.. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர் 2-2 என சமன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved