ஐபிஎல் 11வது சீசன் கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த சீசன் தொடங்கியதிலிருந்து டாஸ் வென்ற கேப்டன்கள் அனைவரும் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தனர்.

இதுவரை நடந்த 13 போட்டிகளில், ஒரு போட்டியில் கூட டாஸ் வென்ற அணி, முதலில் பேட்டிங் செய்யவில்லை. அனைத்து அணிகளுமே இலக்கை விரட்டவே விரும்புகின்றன.

அதுவும் முதல் போட்டியில் மும்பை நிர்ணயித்த இலக்கை விரட்டிய சென்னை அணி, பிராவோவின் அதிரடியால் திரில் வெற்றி பெற்றது. அதன்பிறகு நடந்த இரண்டாவது போட்டியிலும், இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி, டெல்லியை வீழ்த்தியது.

இதையடுத்து நடந்த அனைத்து போட்டிகளிலும் டாஸ் வென்ற அணி, முதலில் பவுலிங்கையே தேர்வு செய்தது. ஆனால் கடந்த சில போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிதான் வெற்றி பெற்றது. தற்போது டிரெண்ட் தலைகீழாக மாறியுள்ளது.

இலக்கை எட்டவிடாமல், சுருட்டி முதலில் வெற்றி அணி ரஹானேவின் ராஜஸ்தான் ராயல்ஸ் தான். அதன்பிறகும், இலக்கை விரட்டிய அணிகள் வெற்றி பெற்றன. ஆனால், கடைசி மூன்று போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. 

ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 218 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் பெங்களூரு அணியும், பஞ்சாப் நிர்ணயித்த 198 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் சென்னை அணியும் தோற்றன.

இதையடுத்து நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நிர்ணயித்த 201 என்ற கடின இலக்கை எட்ட முடியாமல், டெல்லி அணி, 71 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 

அதனால், நிலைமை தலைகீழாக மாறியுள்ளதால், இனிவரும் போட்டிகளிலாவது டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்கிறதா என பார்ப்போம்..