Is this senior player in Indian tennis team for Asian Games?

ஆசியப் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணியில் இரண்டு தங்கம் வென்ற மூத்த வீரர் லியாண்டர் பயஸ் இடம் பெற்றுள்ளார்.

வரும் ஆகஸ்ட் மாதம் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியா தலைநகர் ஜாகர்த்தாவில் நடைபெறுகின்றன. 

இதில் பல்வேறு விளையாட்டுகளில் இந்தியா சார்பில் 900 பேர் கொண்ட அணி அனுப்பப்படுகிறது. 

இந்த நிலையில் டென்னிஸ் அணிகள் பட்டியலை அகில இந்திய டென்னிஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.

அதில், "ஆசியப் போட்டிகளில் இரண்டு தங்கம் வென்றுள்ள லியாண்டர் பயஸ்" இடம் பெற்றுள்ளார். லியாண்டர் பயஸ் ஆசியப் போட்டிகளில் 8 முறை பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒற்றையர் ஆடவர் பிரிவில் ராம்குமார் ராமநாதன், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், சுமித் நகால், இரட்டையர் பிரிவில் பயஸ், ரோஹன் போபண்ணா, விஜ் சரண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா, கர்மன் கெளர் தண்டி, ருட்டுஜா போஸ்லே, பிரஞ்சாலா, ரியா பாட்டியா, பிரார்த்தனா தோம்பரே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 அணியின் பயிற்சியாளர்களாக (ஆடவர்) ஜீஷன் அலியும், (மகளிர்) அங்கிதா பாம்ப்ரியும் செயல்படுவர்.